வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை, விவசாயிகள் வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை எவ்வாறு விண்ணப்பிக்க என்ற, கூடுதல் தகவலை, இந்த பதிவில் பார்க்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
இ-வாடகைத் திட்டத்தில் குறைந்த கட்டணத்தில், இயந்திரங்களைப் பெற முன்பதிவு செய்திருக்க வேண்டும். விவசாயிகளின் அலைச்சலைத் தவிர்க்கும் வகையில் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, முதலில் 'உழவன்' செயலிக்கு பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில், முகப்பு பக்கத்தில் 'வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு' என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். தொடர்ந்து, 'வேளாண் பொறியியல் துறை - இயந்திரங்கள் வாடகைக்கு' என்பதையும், மேலும் அதைத் தொடர்ந்து 'முன்பதிவு' என்பதையும் தேர்வு செய்தல் வேண்டும்.
இதையடுத்து 'வேளாண் இயந்திரங்கள் வாடகை விபரம்' திரையில் தோன்றும். அதை க்ளிக் செய்து, வேளாண் பணிக்கான இடத்தின் மாவட்டம், வட்டம், வட்டாரம், கிராமம், முகவரி, நிலத்தின் புல எண், தேவைப்படும் தேதி, நேரம் ஆகிய விபரங்களைக் பூர்த்தி செய்ய வேண்டும்.
உங்கள், இதையடுத்து தேவைப்படும் இயந்திரங்களின் பட்டியல், தோன்றும். அதில், நமக்கு தேவைப்படும் இயந்திரத்தை தேர்வு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு தேவைப்படும் கால அளவிற்கு ஏற்ப கட்டணம் விவரம் திரையில் தோன்றும். பின்னர், வாடகைக்கான நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளித்து, முன்பதிவை உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. முன்பதிவு விபரத்தினை சரிபார்த்த பின்னர், 'பணத்தை செலுத்துக' என்கிற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். அதில், எவ்விதமாக கட்டணம் செலுத்த வேண்டும், அதாவது நெட் பேங்கிங், கிரடிட் கார்டு மூலம் வாடகைக் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதையடுத்து முன்பதிவிற்கான ஒப்புகைச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டியது, அவசியம். இவை அனைத்தையும் பூர்த்தி செய்த பின், நாம் தேர்வு செய்த நாளில், தேர்வு செய்த பணியிடத்திற்கு இயந்திரம் அனுப்பப்படும்.
செய்தி:
பூ செடியோ, காய் செடியோ பூக்கள் உதிராமல் காக்க! பெருங்காய மோர் கரைச்சல்!
இ-வாடகை செயலி விவரம் (E-Rental Application Details)
இதனை முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இ-வாடகை ஆன்லைன் செயலியின் மூலம், வேளாண்மைப் பொறியியல் துறையின் செய்திகள் மற்றும் திட்டங்களை விவசாயிகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இயலும்.
இதுதவிர, விவசாயப் பெருமக்கள், தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை இச்செயலியின் மூலம் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க:
வீட்டில் குழந்தைகள் இருந்தால், இந்த செடிகளை வளர்க்கக்கூடாது!
Share your comments