1. விவசாய தகவல்கள்

பெண்களுக்கு ஏற்ற இலகுவான பண்ணைக் கருவிகள் - ஓர் அறிமுகம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Easy Farm Tools for Women

வேளாண்மைப் பணிகளை பெண்கள் சுலபமாக செய்ய பண்ணைக் கருவிகள்  (Farm Tools) பயன்படுத்துவது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி சோ.கமல சுந்தரி விளக்கமளித்துள்ளார்.

பண்ணைக் கருவிகள்

பண்ணைக் கருவிகள் பயன்படுத்துவதன் மூலம் வேலை தரத்தையும் உற்பத்தியையும் மேம்படுத்தலாம். மேலும் வேலைப்பளுவை குறைக்கலாம். நேரத்தை மிச்சப்படுத்தலாம், உற்பத்தித்திறனை அதிகரிக்கலாம்.

பல வகையான பண்ணைக் கருவிகள், பண்ணை மகளிருக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது வெட்டும் கருவி, நாற்று நடும் கருவி, கையடக்க உரமிடும் கருவி, விதை விதைக்கும் கருவி, உரம் பரப்பி, உயரம் அனுசரிக்க கூடிய களைக்கொத்தி, கரும்பு சோகை உரிக்கும் கருவி, வெங்காயம் நடும் கருவி, வேர்கடலை பிரித்தெடுக்கும் கருவி, பண்ணை மகளிர் கேற்ற பாதுகாப்பு ஆடை, வேர்க்கடலை உடைக்கும் கருவி மற்றும் பழம் பறிக்கும் கருவி ஆகிய பல வகையான பண்ணைக் கருவிகள் மகளிருக்கு உதவும் வகையில் மதுரையில் உள்ள சமுதாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெளியீடாக உருவாக்கப்பட்டுள்ளது.

வெட்டும் கருவி

ஒவ்வொரு கருவியும் ஒவ்வொரு பயன் தரக்கூடியது. அதில் வெட்டும் கருவியானது அறுவடை செய்யும்போது விரல்கள் மற்றும் கைகளில் வெட்டுக்காயம் விழாமல் தடுக்க பெரிதும் பயன்படுகிறது. இந்த கருவி எளிதாக பயன்படுத்தும் முறையில் உள்ளதால் மேலும் கை விரல்கள் அளவுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால். இதனை எளிதாக பயன்படுத்தலாம். கைகளில் வெட்டுக்காயங்கள் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறுவடை செயல்திறனை அதிகரிக்கும் உரமிடும் கருவி ஆனது ஒரு மணி நேரத்திற்கு 18 கிலோ அதிகமாக அறுவடை செய்யக்கூடும்.

நாற்று நடும் கருவி

பண்ணை மகளிருக்கு மிக எளிதாக நின்றுகொண்டே நாற்று நடுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல் சோர்வு மற்றும் நேரமும் குறைக்கப்படுகிறது. ஆகையால் பழைய முறையான குனிந்து நாற்று நடும் பழக்கங்கள் முற்றிலும் அகற்றப்படுகிறது. மேலும் இந்த கருவி எடை குறைவாக உள்ளதால் பெண்கள் எளிதாக கையாளலாம். அதிக ஆற்றலும் தேவைப்படுவதில்லை.

மேம்படுத்தப்பட்ட நாற்று நடும் கருவி பயன்படுத்தும்போது இதயத் துடிப்பின் அளவு குறைந்துள்ளது. உடல் சம்பந்தமான உபாதைகள் குறைக்கப்படுகிறது. உடல் சார்ந்த வேலைச்சுமையும் குறைக்கப்படுகிறது. ஆற்றல் செலவினம் குறைக்கப்படுகிறது.

கையடக்க உரமிடும் கருவி

இக்கருவியானது எடை குறைவாக உள்ளதால் இந்த கருவியின் கீழ் பகுதி இரண்டு பாகங்களாக கொண்டுள்ளது. மேற்பகுதியில் உள்ள குழாயானது உரங்களை நிரப்புவதற்கு என்றும் கீழ் உள்ள சிறிய குழாயானது உரங்களை வெளியேற்றப் பயன்படுத்தப்படுகிறது. கருவியை அழுத்தும்போது உரம் வெளியேறும் துவாரம் இருப்பதுதற்கு ஏற்ற அமைப்பை ஏற்படுத்தி சாதாரண நிலையில் இருக்கும் போது உரம் வெளியேறுவதை தடுக்கிறது. அழுத்தம் கொடுக்கும் போது மட்டும் உரம் வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உரம் (Fertilizer) வீணாவதை தடுக்க உதவுகிறது.

இந்தக் கருவியும் குறைவான எடையுடன் இருப்பதால் கையாளுவதில் சிரமங்கள் குறைகிறது. உரங்களும் குறைகிறது. முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. ஆற்றல் செலவினம் குறைக்கப்படுகிறது. குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் உரமிட்டு முடிக்கப்படுகிறது. இதனுடைய உரம் இடும் திறன் உயரம் அதிகரிக்க கூடிய கலை கொத்தி எடை குறைவானது மற்றும் எளிதாக எடுத்துச் செல்லக் கூடியது. கருவியின் உயரமானது மகளிரின் உடலியல் உயரம் மற்றும் கை அளவுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப் பட்டுள்ளது. தசைநார்கள் குறைக்கப்படுகிறது.

வெங்காயம் விதைக்கும் கருவி

இந்தக் கருவி வெங்காயத்திற்கு ஏற்படும் சேதங்களை குறைக்கப்படுகிறது. குறைந்த நேரத்தில் அதிக நிலத்தினை நட்டு முடிக்க பயணிகள் பயன்படுகிறது. அனைத்து வெங்காயமும் சீராக முளைக்கிறது. ஆற்றல் செலவினம் குறைக்கப்படுகிறது.

பாதுகாப்பு ஆடை

மகளிருக்கு ஏற்ற பாதுகாப்பு ஆடையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில பயிர்கள் அறுவடை செய்யும்போது அதாவது கரும்பு, வெண்டைக்காய் போன்றவற்றை அறுவடை (Harvest) செய்யும்போது அவற்றில் உள்ள சிறு முள்கள் சுனை போன்றவை அரித்து தோலில் காயம், எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் சிரமங்களை குறைக்க பெண்களுக்கென்றே பிரத்தியேக ஒரு பாதுகாப்பு ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. ‌பாதுகாப்பு ஆடையானது நமது காலநிலை தட்பவெப்பநிலை மற்றும் சீதோஷ்ண நிலையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதுகாப்பு ஆடை மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. தலைக்கவசம் மேல்சட்டை, மற்றொன்று கையுறை. ஆகையால் பண்ணை மகளிர்கள் இந்த பண்ணைக் கருவிகளை பயன்படுத்தி பல வேலைகளை சுலபமாக செய்யலாம்.

மேலும் படிக்க

மழைக்காலத்தில் பயிர்களை பாதுகாக்கும் சிறந்த வழிமுறைகள்!

மொட்டை மாடியில் நெல் நாற்றங்கால்: விவசாயி அசத்தல்!

English Summary: Easy Farm Tools for Women - An Introduction! Published on: 06 November 2021, 01:08 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.