தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளுக்கு விநியோகிக்க 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு கொள்முதலில் ஊழல் புகார் எழுந்ததால், தமிழக அரசு அந்த டெண்டரை ரத்து செய்துதிமுக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ரூ.100 கோடி இழப்புத் தவிர்ப்பு (Rs. 100 crore loss avoidance)
தற்போது புதிய டெண்டர் கோரியதன் மூலம் அரசுக்கு ஏற்பட இருந்த ரூ.100 கோடி இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
துவரம் பருப்பு கொள்முதல் (Purchase of lentils)
தமிழக அரசு 2020ம் ஆண்டு ரேசன் கடைகளில் பருப்பு விநியோகம் செய்யத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிட்டது.
கிறிஸ்டி நிறுவனம் (Christie's Company)
நாமக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனத்துக்கு இந்த டெண்டர் ஒதுக்கப்பட்டது. இந்த டெண்டரில் வெளிச்சந்தையில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.100க்கும் குறைவாக விற்கப்படும் நிலையில், ரூ.143க்கு கிறிஸ்டி நிறுவனம் டெண்டர் எடுத்திருந்தது.
ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு (Loss over Rs.100 crore)
கூடுதல் விலைக்கு டெண்டர் கொடுக்கப்பட்டதால் அரசுக்கு ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என அறப்போர் இயக்கம் புகார் எழுப்பி இருந்தது.இந்த ஊழலுக்கு அப்போதைய அதிமுக அமைச்சர் காமராஜ், துறை அதிகாரியான சுதாதேவி ஐஏஎஸ், ஒப்பந்ததாரரான கிறிஸ்டி நிறுவனத்தின் தலைவர் குமாரசாமி ஆகியோர் உடந்தை என சுட்டிக்காட்டியது.
இயக்குநர் மாற்றம் (Director Changed)
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அதிகாரிகள் மற்றும் கிறிஸ்டி நிறுவனம் கூட்டாக முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்து வந்த சுதாதேவி கடந்த வாரம் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.
புதிய டெண்டர் (New tender)
பின்னர் முறைகேடு புகார் உறுதியானதையடுத்து கிறிஸ்டி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட டெண்டரை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும், பருப்பு கொள்முதல் விலை கிலோ ரூ.100க்கு குறைவாகவும், 20 ஆயிரம் டன் தேவை என்றும் இ-டெண்டர் வெளியிட்டு உள்ளது. இந்த டெண்டர் ஏலம் ஆன்லைனிலேயே நடைபெறும் என்றும் புதிய டெண்டர் கோரியதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
ஆளுநரிடமும் புகார் (Complain to the Governor)
அதிமுக ஆட்சி காலத்தில் கிறிஸ்டி நிறுவனத்தின் மீது ஏற்கனவே பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன. குறிப்பாக சத்துணவு திட்ட முட்டை கொள்முதல் முறைகேடு தொடர்பாக ஆளுநரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
விவசாயிகள் போராட்டம்: மே 26ம் தேதி கருப்பு தினமாக அனுசரிப்பு!
ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்!
Share your comments