1. விவசாய தகவல்கள்

கரும்பு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் எத்தனால் உயிரி உரம் உற்பத்தி!

KJ Staff
KJ Staff
Sugaecane
Credit : Hindu Tamil

நமக்கு தேவையான கச்சா எண்ணெயில் 85 சதவீதத்தையும், எரிவாயுவில் 56 சதவீதத்தையும், இறக்குமதி செய்து வருகிறோம். இதை குறைக்கும் வண்ணம், மத்திய அரசு, உயிரி எரிபொருள் உற்பத்தியில் (Biofuel production) கவனம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாக, உயிரி எரிபொருட்களான எத்தனால் (Ethanol), உயிரி எரிவாயு (Biogas) மற்றும் உயிரி டீசல் (biodiesel) உற்பத்தியில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், இறக்குமதி சார்பு குறைவதோடு, விவசாயிகளின் வருமானமும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தான்.

எத்தனால் உற்பத்தி உயர்வு:

வரும், 2022க்குள் பெட்ரோலோடு, 10 சதவீதம் எத்தனால் (Ethanol) கலப்பது என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறது. இதுவே, 2030க்குள், 20 சதவீதமாக அதிகரிக்கப்படும். இதனால், வாகன புகையில் மாசும் (Pollution) குறையும். கடந்த, 2013-14ல், 38 கோடி லிட்டராக இருந்த எத்தனால் உற்பத்தி, 2019ம் ஆண்டு, 180 கோடி லிட்டரானது. இந்த ஆண்டு இது, 350 கோடி லிட்டராக உயரும்!எத்தனால் பெரும்பாலும் கரும்பு (Sugarcane) சார்ந்த மூலப்பொருட்களில் இருந்து தயாராகிறது. கெட்டுப்போன தானியங்கள் உள்ளிட்ட வேளாண் மற்றும் தொழிற்சாலை கழிவுகளும் பயன்படுகின்றன. இந்த வகையில், கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும், 35 ஆயிரம் கோடி ரூபாய், கரும்பு மற்றும் சாராய ஆலைகள் வழியாக விவசாயிகளை சென்றடைந்துள்ளது.

கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு பணப் பட்டுவாடா செய்ய பல மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளும் நிலையில், எத்தனால் வாங்கும் எண்ணெய் நிறுவனங்கள் சரியாக, 21 நாட்களில் எத்தனாலுக்கான பணத்தை சாராய ஆலைகளுக்கு கொடுத்து விடுகின்றன. இதனால், சிக்கலை சந்தித்து வரும் கரும்பு துறையில் பணப் புழக்கத்தைக் கூட்டவும், விவசாயிகளுக்கு மாற்று வருவாய் (Alternative income) கிடைக்கவும், எத்தனால் உற்பத்தி வழி செய்திருக்கிறது. அண்மையில், இந்திய உணவுக் கழகத்தின் கூடுதல் கையிருப்புகளையும், சோளத்தையும் பயன்படுத்தி எத்தனால் உற்பத்தி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க ஒரு மாற்றுச் சந்தை (Alternative market) உருவாகியுள்ளது.

உயிரி டீசல்

கடந்த, 2018ம் ஆண்டு வெளியான தேசிய உயிரி டீசல் கொள்கையில் (National Biodiesel Policy), 2030ம் ஆண்டுக்குள் டீசலில், 5 சதவீதம் உயிரி டீசல் கலக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உணவுக்கு பயன்படாத எண்ணெய் வித்து மூலம் வேளாண்மை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தரிசு நிலங்களில் இவற்றை பயிரிட ஊக்கம் கொடுக்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள், 2015 - 16ல், 1.19 கோடி லிட்டராக இருந்த உயிரி டீசல் கொள்முதலை, கடந்த ஆண்டு நிலவரப்படி, 10.55 கோடி லிட்டராக அதிகரித்துள்ளன. இதுவும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க காரணமாகி இருக்கிறது.

Credit : Dinamalar

உயிரி எரிவாயு

கடந்த, 2018ல் துவங்கப்பட்ட, நீடித்த நிலைத்த மலிவான மாற்றுப் போக்குவரத்து திட்டம், நாட்டின் உயிரி கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு தயாரிக்க, உரிய சூழ்நிலையை கொண்டுவர முயல்கிறது. அதன்படி, 2023க்குள் மொத்தம், 1.50 கோடி டன் உற்பத்தி திறன் கொண்ட, 5,000 உயிரி எரிவாயு உற்பத்தி நிலையங்களை (Biogas production plants) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 75 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், 1.75 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான வாய்ப்பும் உள்ளது. ஹரியானா, பஞ்சாப், உ.பி.,யில் திட்டமிடப்பட்டுள்ள ஆலைகள் வைக்கோல் கழிவை (Straw waste) பயன்படுத்தும். இதன் மூலம், அவற்றை எரிப்பதால் டில்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று கடுமையாக மாசடையும் சூழல் தவிர்க்கப்படும். மேலும், கழிவு மேலாண்மையில் (Waste management) வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த ஆலைகளில் உபரி பொருளாக கிடைக்கும் உயிரி உரம் (Bio fertilizer) விவசாயத்திற்குப் பயன்படும்.

1 லட்சம் கோடி ரூபாய்

உயிரி எரிபொருள் கட்டமைப்பு, சமூகங்களுக்கு சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சுகாதார பலன்களை தரும். விரைவில், எண்ணெய் நிறுவனங்கள் வாங்கும் உயிரி எரிபொருட்களின் மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாயை எட்ட உள்ளது. இந்த பணத்தில் பெரும்பங்கு, விவசாயிகளை தான் சென்றடையும்.

தர்மேந்திர பிரதான்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர்
மத்திய அரசு

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

 

மேலும் படிக்க

விவசாயிகளிடம் கரும்பை நேரடியாக கொள்முதல் செய்யும் அரசு!

தேனீ வளர்ப்பில் நேரத்தை மிச்சப்படுத்த வந்துவிட்டது நவீன ரோபோ!

முளைக்கும் நிலக்கடலையை சரியாகப் பிரித்து மகசூலை அதிகரிப்பது எப்படி?

English Summary: Ethanol bio-fertilizer production that doubles the income of sugarcane farmers Published on: 05 January 2021, 08:23 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.