இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தட்கல் முறையில் துரித மின் இணைப்பு வழங்க ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
2022-2023-ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தில் மின் மோட்டார் குதிரை திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் வரை மானியத்தில், ஆதிதிராவிடர்களுக்கு 900 எண்ணிக்கையும், பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையில் மொத்தம் 1,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் வெப்சைட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த விவசாயிகளாக இருக்க வேண்டும். விவசாய நிலம் மற்றும் நில பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். நிலத்தில் கிணறு அல்லது போர்வெல் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் தாட்கோ வெப்சைட்டில், விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 எச்.பி திறன் மின் இணைப்பு கட்டணமாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கான, 10 சதவீத பயனாளி பங்கு தொகை ரூ.25 ஆயிரம், 7.5 எச்.பி திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்திற்கான, 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.27 ஆயிரத்து 500 மற்றும் 10 எச்.பி திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.3 லட்சத்திற்கான, 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.30 ஆயிரம், 15 எச்.பி திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.4 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை பேங்க் டிமாண்ட் டிராப்ட் மூலமாக அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ வெப்சைட்டில் 10 சதவீத பயனாளி பங்கு தொகையுடன் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் படிக்க:
Share your comments