சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பூ, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை விற்பனை செய்ய தங்கள் பகுதி தோட்டக்கலை துறையின் உதவி இயக்குநா்களை தொலைபேசி மூலம் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட தோட்டக் கலை துறையின் துணை இயக்குநா் ஜி. அழகுமலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சிவகங்கை மாவட்டத்தில் சுமாா் 20 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் தோட்டக்கலை பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது, சில தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், கரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால், மே 24 ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளைப்பொருட்களை விற்பனை செய்ய தொலைபேசி எண்
எனவே, விவசாயிகள் தாங்கள் விளைவித்த தோட்டக்கலை சாா்ந்த விளைபொருள்களான பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்களை சந்தைப்படுத்துவதில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டாலோ, பொருள்களை கொண்டுசெல்ல அனுமதி சீட்டு தேவைப்பட்டாலோ, தோட்டக்கலை தொழில்நுட்பம் சாா்ந்த சந்தேகங்கள் ஏற்பட்டாலோ சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநரை செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
சிவகங்கை வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் 87602-10539 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், காளையாா்கோவில் 90036-31332 என்ற எண்ணிலும், மானாமதுரை 95977-51999, இளையான்குடி 97511-51257, திருப்பத்தூா் 85081-30960, தேவகோட்டை 93445-26574, திருப்புவனம் 94434-55755, சாக்கோட்டை 74023- 28371, எஸ்.புதூா் 97866-13286, சிங்கம்புணரி 97514-64516, கல்லல் 89409-95966, கண்ணங்குடி பகுதி விவசாயிகள் 87602-10539 என்ற செல்லிடப்பேசி எண்களில் அழைக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
உரிய தொழில்நுட்பம் மூலம் மலர் சாகுபடி செய்து இழப்பைத் தவிருங்கள், விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை!!
ஊழல் எதிரொலி - 20,000 டன் துவரம்பருப்பு கொள்முதல் டெண்டர் அதிரடியாக ரத்து!
உடல் எடையைக் குறையைக் குறைக்க ஆசையா? கட்டாயம் இதை சாப்பிடுங்கள்!
Share your comments