மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாயத்தை மேம்படுத்த வேண்டியது கட்டாயம். இதற்கு தொழில்நுட்ப வசதிகளை வேளாண்துறையில் புகுத்த வேண்டியதும் அவசியமே.
அந்த வகையில், இந்தியாவின் முதல் உழவு பயன்பாட்டிற்கு ஏற்ற எலக்ட்ரிக் டிராக்டர் என்ற பெருமையுடன் சோனாலிகா டைகர் எலக்ட்ரிக் (Sonalika Tiger Electric) டிராக்டர் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அறிமுகவிலை ரூ.5.99 லட்சம் ஆகும்.
நவீனவசதிகளுடன் மின்சாரத்தில் இயங்கும் சோனாலிகா எலக்ட்ரிக் டிராக்டர் தேசிய விவசாயிகள் தினத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மின்சார டூ வீலர்கள்(Electric two wheelers) , கார்கள் (Cars), பேருந்துகள் )(BUses) ஆகியவை பயன்பாட்டுக்கு வர தயாராகி வரும் நிலையில் அந்த வரிசையில் டிராக்ட்ரும் இணைந்துள்ளது.
சோனாலிகா டைகர் எலக்ட்ரிக் டிராக்டர்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டைகர் எலக்ட்ரிக் மாடல் அதிக சத்தத்தை வெளியிடாவிதமாகவும், சுற்றுச் சூழலுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்சார டிராக்டரில் அதிகபட்சமாக மணிக்கு 24.93 கிமீ வேகத்தில் பயணிக்க இயலும். இந்த டிராக்டரில் பொருத்தப்பட்டுள்ள IP67 சான்றிதழ் பெற்ற 25.5 kW பேட்டரி மிக சிறப்பான முறையில் செயல்திறனை வெளிப்படுத்தும்.
முழுமையான சார்ஜில் 2 டன் (Ton) டிராலியுடன் 8 மணி நேரம் பயன்பாட்டிற்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.சாதாரண சார்ஜர் 3 பின் 15-amp மூலம் 10 மணி நேரத்திலும், ஃபாஸ்ட் சார்ஜர் என இரு ஆப்ஷன்களை வழங்கும் இந்நிறுவனம், மிக விரைவு சார்ஜர் மூலம் நான்கு மணி நேரத்தில் முழுமையான சார்ஜ் ஏறிவிடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
டீசல் இன்ஜின் டிராக்டருடன் ஒப்பிடுகையில் 75 சதவீத்துக்கு குறைவான கட்டணத்தில் இந்த மின்சார டிராக்டரை இயக்க முடியும் என்பது இதன் சிறப்பு அம்சம்.
மேலும் டீசல் டிராக்டரின் டார்க்கிற்கு இணையாக எந்தவித சமரசமும் இன்றி செயல்படும் என்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து சோனாலிகா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ராமன் மிட்டல் கூறுகையில், டைகர் எலக்ட்ரிக் என்பது சோனாலிகாவின் நிரூபிக்கப்பட்ட டிராக்டர் பிளாட்ஃபாரத்தில் விவசாயிகளின் நட்பை உறுதி செய்வதற்காகவும், மாசு உமிழ்வு இல்லாத பசுமையை நோக்கி முன்னேறும்விதமாக எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும், உருவாக்கப்பட்டுள்ளது.
டைகர் எலக்ட்ரிக் மாடல் வழக்கமான டிராக்டரில் இருந்து வேறுபட்டதல்ல என்றபோதிலும், எரிபொருள் செலவைக் குறைக்கும் போது அது விவசாயி நண்பனாக மாறும். இது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதே உலகளாவிய தொழில்நுட்ப அற்புதத்தைக் கொண்டுள்ளது.
டைகர் எலக்ட்ரிக் பஞ்சாபின் ஹோஷியார்பூரில் உள்ள சோனாலிகாவின் ஒருங்கிணைந்த டிராக்டர் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலை ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் முறையில் இயங்குவதனால் 2 நிமிடங்களுக்கு ஒரு புதிய டிராக்டரை தயாரிக்கும் திறனை கொண்டுள்ளது.
அறிமுகச் சலுகையாக டைகர் எலெக்ட்ரிக் டிராக்டர் விலை ரூ.5.99 லட்சம் என (எக்ஸ்ஷோரூம்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வாங்க விரும்பும் விவசாயிகளுக்காக நாடு முழுவதும் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வறுமையை ஒழித்துக் கிராமங்களை வளமாக்கும் MGNREGA!!
ரபி பருவப் பயிர்களுக்குக் காப்பீடு செய்ய அழைப்பு!
மத்திய அரசு வழங்கும் சூரிய மித்ரா பயிற்சி-தங்குமிடம், உணவு இலவசம்!
Share your comments