திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில், நெல் கொள்முதல் மையம் துவக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் விற்பனையாகாமல், அறுவடையான நெல் தேங்கியதால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.
55,000 ஏக்கர் பாசன வசதி (Irrigation)
திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட, 55,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு, கடந்தாண்டு, ஆகஸ்ட் மாதத்தில், தண்ணீர் திறக்கப்பட்டது.
இரு ஆயக்கட்டு பகுதிகளிலும் நெல் (Paddy in both strategic areas)
இதையடுத்து இரு ஆயக்கட்டு பகுதிகளிலும், நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் அமைத்து, சாகுபடி பணிகளை விவசாயிகள் துவக்கினர். குறிப்பிட்ட நேரத்தில், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், இரு ஆயக்கட்டு பகுதிகளிலும், நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டது.
வழக்கமாக, மடத்துக்குளம், கல்லாபுரம் உட்பட இடங்களில் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின், பரிந்துரையின்படி, தற்காலிக அரசு நெல் கொள்முதல் மையம் துவக்கப்படும்.
பரிந்துரைக்கவில்லை (Not recommended)
இதனால் நெல்லுக்கு நிலையான விலை கிடைத்ததுடன், வியாபாரிகளும் நேரடி கொள்முதலுக்கு ஆர்வம் காட்டி வந்தனர்.ஆனால் இந்த முறை நடப்பாண்டு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், உடுமலை மடத்துக்குளம் தாலுகாவில், கொள்முதல் மையம் அமைக்க அரசு வாணிப கழகத்துக்கு, பரிந்துரைக்கவில்லை.
இதனால், அமராவதி ஆயக்கட்டுக்குட்பட்ட, தாராபுரம் உட்பட பகுதிகளில் மட்டும், கொள்முதல் மையம் துவக்கப்பட்டது. இதன் காரணமாக, கல்லாபுரம் உட்பட முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆர்வம் காட்டவில்லை (Not interested)
அரசு கொள்முதல் மையம் துவக்கப்படாத நிலையில் வியாபாரிகளும் நடப்பு சீசனில், நெல் கொள்முதலுக்கு ஆர்வம் காட்டவில்லை . மேலும், சன்ன, குண்டு ரக நெல்லுக்கு, கிலோவிற்கு, ரூ.11 முதல் ரூ.13 அளவுக்கே விலை நிர்ணயிக்கப்பட்டது.
பருவம் தவறிய மழை, நோய்த்தாக்குதல் உட்பட காரணங்களால், மகசூல் பாதித்துள்ள நிலையில், நெல்லுக்கு குறைந்த விலை நிர்ணயிப்பதால், விவசாயிகள் செய்வது அறியாது திகைத்துள்ளனர்.
கொள்முதல் செய்யப்படாததால், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதியில், விற்பனைக்காக தரம் பிரிக்கப்பட்ட நெல், முழுவதும் களங்களில், தேங்கியுள்ளன.
விவசாயிகள் கொந்தளிப்பு (Farmers turmoil)
எனவே நெல்லின் தரம் பாதிக்கப்படும் முன், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கொள்முதல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல்,திருவாரூரிலும் நெல் கொள்முதல் செய்யப்படாததால், விவசாயிகள் கொந்தளித்துள்ளனர்.
மேலும் படிக்க...
ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்!
PM Kisan: 70 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.18,000 - அமித்ஷா தகவல்!
Share your comments