சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் டிராக்டர்களைப் பயன்படுத்தும்போது, டீசலை சிக்கலின்றி பெற ஏதுவாக டீசலை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் திட்டத்தை ஆந்திர அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பருவமழை காலம்
வடகிழக்குப் பருவமழை பல மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், சம்பா சாகுபடிக்கானப் பணிகளை விவசாயிகள் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
நேரம் வீணாகிறது (Time is wasted)
இருப்பினும் கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் விவசாயப்பணிகளுக்குத் தேவைப்படும் டீசலை நகர்புறங்களுக்குச் சென்று பெட்ரோல் நிலையங்களில் வாங்கி வர வேண்டிய சிரமம் உள்ளது. இதனால் அவர்களது நேரம் வீணாகிறது.
இதனைக் கருத்தில் கொண்டும், டிராக்டர் பயன்பாட்டிற்காக டீசலைப் பெறுவதில் உள்ள இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையிலும், ஆந்திர பிரதேச அரசுப் புதியத் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
நடமாடும் டீசல் வாகனங்கள்
இதன்படி, விவசாயிகள் வீடு தேடி வந்து டீசல் விற்பனை செய்யப்படும். இதற்காக முதற்கட்டமாக 6 ஆயிரம் நடமாடும் டீசல் விற்பனை வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்தத் திட்டத்தை நெல்லிமர்லாத் தொகுதி எம்எல்ஏ தொடங்கிவைத்தார்.
சேவைக் கட்டணம் இல்லை (No service charge)
விவசாயிகள் வீடு தேடிச் சென்று டீசல் விற்பனை செய்வதற்குக் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என பெட்ரோலியப் பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்கம் உறுதி அளித்துள்ளது.
முன்பதிவு அவசியம் (Booking is required)
தங்கள் பகுதிக்கு டீசல் விநியோகம்செய்யப்படும் தேதி மற்றும் நேரத்தைத் தெரிந்து வைத்துக்கொண்டு, விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். இதன் மூலம் தாமதமின்றி டீசல் கிடைக்கும்.
ரூ.20 மானியம் (Rs.20 subsidy)
முன்னதாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கருத்தில்கொண்டு கர்நாடக அரசு விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசலுக்கு லிட்டருக்கு 20 ரூபாய் மானியம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
Share your comments