விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண்ணை அப்டேட் செய்யும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் பிரதமரின் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6,000 ரூபாய் எளிதில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், பிரதமரின் கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) திட்டம் மத்திய அரசின் 100 சதவீதப் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
நேரடி மானியம்
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 38.24 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 11 தவணைகளாக நேரடி மானியமாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
விதிகளில் மாற்றம்
அடுத்து 12ஆவது தவணைப் பணம் வரவிருக்கும் நிலையில் அதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணைத் தொகைகளும் பயனாளியின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் எண்
எனவே, பிஎம் கிசான் திட்டப் பயனாளிகள் அனைவரும் இந்தத் திட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரைப் பதிவிட்டு ஆதார் எண்ணை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அப்படி, ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்ய முடியாதவர்கள் அருகிலுள்ள பொதுச் சேவை மையங்களில் தங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்தும் ஆதார் எண்ணை அப்டேட் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம்?
கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!
Share your comments