உயர்த்தப்பட்ட உர விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற, மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, காவிரி நீரேற்று பாசன சங்க செயலாளர் சுப்ரமணியன், பிரதமருக்கு மனு அனுப்பியுள்ளார்.
திடீரென உரங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனடியாக அமலுக்குக் கொண்டுவந்தால், விவசாயிகள் பாதிக்கு ஆளாவார்கள் என பல தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதனைக் கருத்தில்கொண்டு, உயர விலை உயர்வு தற்காலிகமான நிறுத்தப்பட்டுள்ளது. பழைய விலையில் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என உர நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பிரதமருக்கு மனு (Petition to the Prime Minister)
இந்நிலையில், காவிரி நீரேற்று பாசன சங்க செயலாளர் சுப்ரமணியன், பிரதமருக்குக் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
விலை ரூ.600 வரை உயர்வு (Price increase up to Rs.600)
அம்மனுவில் கூறியிருப்பதாவது :
தற்போது, இந்தியாவில், பல்வேறு உர நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் உரங்களுக்கு, மூட்டைக்கு, ரூ.500 முதல் ரூ.600 வரை, விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விவசாயிகளுக்கு, பெருத்த இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி, விவசாயம் தொடர்ந்து செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். ஏற்கனவே, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு, போதுமான விலைக் கிடைப்பதில்லை.
ஏற்க இயலாது (Unacceptable)
இந்நிலையில், மத்திய அரசின் உர விலை உயர்வு,ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதுபோன்ற விலை உயர்வால், நடுத்தர ஏழை விவசாயிகளுக்கு, மிகக் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.
கடன் வாங்கி விவசாயம் (Borrowed agriculture)
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்கள், விலை குறைவாகவும், உற்பத்தி செலவு அதிகமாகவும் மாறுகிறது. ஏராளமான விவசாயிகள், தனியார் நிதி நிறுவனங்களிலும், வங்கிகளிலும், கந்துவட்டிக்காரர்களிடமும், பணத்தைக் கடனாகப் பெற்று, விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இச்சூழலில், உரத்தின் விலை ஏற்றம் என்பது, விவசாயிகளுக்கு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
அடுத்தக் கட்ட முடிவு (Next phase results)
உயர்த்தப்பட்ட உர விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், அனைத்து விவசாய சங்கங் களும் கலந்து ஆலோசித்து, அடுத்தக் கட்ட முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
உரங்களின் விலை உயர்வு நிறுத்தி வைப்பு! பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்!
உரங்கள் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை! விலைவுயர்வைக் குறைக்க கோரிக்கை!
Share your comments