அத்திப்பழம், மர வகையைச் சேர்ந்தது. இதை நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய, நடுத்தர மரமாகும். அத்தியில் நாட்டு அத்தி, டிம்லா அத்தி, ஆப்கான் அத்தி, இஸ்ரேல் அத்தி போன்ற வகைகள் அத்திப்பழ சாகுபடி முறைக்கு ஏற்ற இரகங்களாகும். தை மாதம் நடவிற்கு ஏற்ற பருவம் ஆகும். அத்தி மரமானது களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
அத்தி சாகுபடி (Fig Cultivation)
அத்தி செடிகள் சாகுபடி குறித்து, கடம்பத்துார் ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயி வி.என்.ராமமூர்த்தி கூறியதாவது: எனக்கு சொந்தமான செங்கட்டு மண் நிலத்தில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, அத்தி செடிகளை வாங்கி வந்து, சாகுபடி செய்துள்ளேன்.
இது, ஓராண்டுக்கு பின் மகசூல் வரும் என கூறினர். பிற, ஒட்டு ரகம் மற்றும் விதை பதியம் போட்ட செடிகளுக்கு, இது பொருந்தும்.விண் பதியத்தில் போடப்பட்ட செடிகளை சாகுபடி செய்யும் போது, சற்று வித்தியாசமாக உள்ளது. ஆறு மாதங்களில், அத்தி செடிகளில் காய் மகசூல் வந்துவிடுகிறது.
விண் பதிய முறையில் அத்தி சாகுபடி செய்யும்போது, செடிகள் வளர்த்தியாக இருந்தால், முதலில் காய்க்கும் காய்களை கிள்ளி எரியத் தேவையில்லை. அதை அப்படியே அறுவடைக்காக, செடிகளில் விட்டு வைக்கலாம். பிற ரக அத்தி செடிகளைவிட, மஹாராஷ்டிரா அத்தி செடிகளில், மகசூல் மற்றும் பராமரிப்புகள் எளிதாக உள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் தகவலுக்கு
வி.என்.ராமமூர்த்தி- 94446 10236
மேலும் படிக்க
Share your comments