கால்நடை வளர்ப்புக்கான நிதியை 15,000 கோடி ரூபாய் மதிப்பில் நிர்ணயித்து, விவசாயிகள் மற்றும் மக்களிடையே கால்நடைகளை வளர்க்க ஊக்கப்படுத்தி வருகிறது. கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை, விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு, கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் (ANIMAL HUSBANDRY INFRASTRUCTURE DEVELOPMENT FUND), பணம் வழங்கப்பட்டு வருகிறது.
கால்நடை வளர்ப்பு (Livestock)
கால்நடை வளர்ப்புக்கான நிதியை சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்பில் நிர்ணயித்துள்ளதாக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெருகிவரும் மக்கள் தொகையின் உணவு தேவையை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் தரமான முறையில் உணவு வழங்கப்பட இந்த நிதி தொகை உதவும். எனவே, ஆடு மாடு வளர்க்க விரும்புவோர் மத்திய அரசின் இந்த நிதியை பெறலாம்.
கால்நடை வளர்ப்பு
இந்த திட்டத்தின் மூலம் வங்கிகளிடமிருந்து 90 சதவிகிதம் வரை கடன் பெற முடியும். இதற்கு அரசு 3 சதவிகித வட்டி மானியத்தை வழங்கும்.
ஆத்ம நிர்பார் பாரத் அபியான் நிதி தொகுப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட இந்த நிதியை பெற உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், பிரிவு 8 நிறுவனங்கள், தனிப்பட்ட தொழில் முனைவோர், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைப்புகள் ஆகியவை தகுதி உடையவையாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments