நடவு மற்றும் அறுவடை (Harvest) பணிகளுக்கு, நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், புது வரவாக, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க, 'ஆண்ட்ராய்டு' தொழில்நுட்பத்துடன் (Android technology) கூடிய, 'ட்ரோன்' எனும் பறக்கும் விமான கருவி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆர்.கே.பேட்டையில், நேற்று நடத்தப்பட்ட இலவச சேவையை (Free service), விவசாயிகள் வியப்புடன் பார்த்தனர். பருவ மழைக்கு பின், திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில், விவசாய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.ஆந்திர மாநிலத்தில் இருந்து, தொடர்ந்து நீர்வரத்து உள்ளதும், விவசாயிகளுக்கு உத்வேகத்தை தந்துள்ளது; நடவு பணிகளுக்கு பின், களை பறிப்பும் முடிந்துள்ளது.
பறக்கும் விமானம்:
பூச்சி (Pest) கட்டுப்பாடு மேற்கொள்வதில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த தனியார் விவசாய நிறுவனத்தினர், பறக்கும் விமானம் மூலமாக, பூச்சிக்கொல்லி மருந்து (pesticides) தெளிக்கும் கருவியை, நேற்று, ஆர்.கே.பேட்டையில், விவசாயிகளிடம் அறிமுகம் செய்தனர். ஆண்டிராய்டு தொழில்நுட்பத்தில் கட்டுப்படுத்தப்படும் இந்த பறக்கும் விமானம், 10 லிட்டர் கொள்ளளவு உடைய பூச்சி மருந்துடன், வயல்வெளியில் பறக்கும் திறன் உடையது.
700 ரூபாய் வாடகை
பறக்கும் விமானம் ஆறு இறக்கைகளுடன், 'லித்தியம்' பேட்டரி (Lithium Battery) மூலமாக இயக்கப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரி மூலமாக, 20 நிமிடங்கள் தொடர்ந்து பறக்கும். 20 நிமிடங்களில், 1 ஏக்கரில் மருந்து தெளிக்க முடியும். கட்டுப்பாட்டு கருவியில் இருந்து, 300 மீட்டர் சுற்றளவுக்கு, 'ட்ரோன் (Drone)' பறக்கும் கருவி தொடர்பில் இருக்கும். இதன் மூலம், நெல்வயல், பூந்தோட்டங்கள் மட்டுமின்றி, தென்னை, மாந்தோப்புகளிலும் உயர பறந்து சென்று, மருந்து தெளிக்க முடியும் என்பது சிறப்பு. ஒரு ஏக்கர் பரப்பு உடைய வயலில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க, 700 ரூபாய் வாடகை என, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து, திருத்தணி கோட்ட காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கேமரா இல்லாத குட்டி விமானங்கள் (Small planes without cameras)' விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்படுவது சம்பந்தமாக, இதுவரை எந்தவித கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இல்லை. 'இந்த விவசாய சேவை, பரவலாக பயன்பாட்டிற்கு வரும் நிலையில், இதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்' என்றார்.
எளிய முறை:
விவசாயிகள், நேரடியாக வயலில் இறங்கி, பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதில், கால விரயம் ஏற்படுகிறது. மேலும், பூச்சிக்கொல்லி மருந்து பாதிப்பில் இருந்து விலகியிருப்பது மிகவும் சிரமம்; சிலருக்கு, மயக்கம் ஏற்படுவதும் உண்டு. பறக்கும் விமானம் (Flying plane) மூலமாக, பூச்சி மருந்து தெளிப்பதில், விவசாயிகளுக்கும், பூச்சிக்கொல்லிக்கும் இடைவெளி அதிகம் என்பதால், உடல்ரீதியான பாதிப்பு இல்லை. மேலும், உயரமான மரங்களுக்கு, பூச்சி மருந்து தெளிப்பதும் எளிதாகிறது.
ஜி.எஸ்.மணிவண்ணன், விவசாயி - சந்திரவிலாசபுரம்: பூச்சி மருந்து தெளிப்பதில், விவசாயிகளுக்கு இருக்கும் நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் வரப்பிரசாதமே, பறக்கும் விமானம்.
மருந்து தெளிப்பதற்கான இயந்திர வாடகை (Machine rent), மனிதர்கள் நேரடியாக தெளிப்பதற்கான கூலிக்கு இணையாக தான் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆர்.கே.பேட்டை பகுதியில் தற்போது, பூச்சி கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் நடந்து வருவதை கருத்தில் கொண்டே, இங்கு முகாம் அமைத்துள்ளோம்.
எம்.குருமூர்த்தி,
தனியார் நிறுவனம்,
கோவில்பட்டி.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பயிர்களில் நன்மை செய்யும் பூச்சிகளை உற்பத்தி செய்வது எப்படி?
கோடையில் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையை போக்க பசுந்தீவனமாக மர இலைகள்
Share your comments