விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல வகையான ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, அதில் ஒன்று பிரதமர் கிசான் மன்தன் யோஜனா. இந்த ஆண்டு பட்ஜெட்டில் (பட்ஜெட் 2022), பி.எம் கிசானுக்கான ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, கீழே படியுங்கள்.
பிரதமர் கிசான் மான் தன் யோஜனா எவ்வளவு அதிகரிப்பு (How much increase in PM Kisan Maan Dhan)
பிரதமர் கிசான் திட்டத்தில் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இதற்கு முன் 50 கோடி ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. கூடுதலாக, பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜனா (PMKMY) ஓய்வூதியத்தின் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (SMFs) சமூகப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனுடன், இத்திட்டத்தின் கீழ் நீங்கள் முதுமையின் போது வாழ்வாதாரத்தை பராமரிக்கவும் ஆதரிக்கவும், இது பயன்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
PM கிசான் மந்தன் யோஜனாவின் முக்கிய அம்சங்கள் (Key Features of PM Kisan Maandhan Yojana)
இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 60 வயதை எட்டினால், சில விலக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, குறைந்தபட்ச நிலையான ஓய்வூதியமாக மாதம் 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
பயனாளி சராசரியாக 29 வயது நுழைவு வயதில் மாதம் ரூ.100 மட்டுமே பங்களிக்க வேண்டும்.
PMKMY விதிகளின்படி, 18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் திட்டத்தில் பங்களிக்கத் தொடங்கலாம். இதில் மாதத் தொகை ரூ.55 முதல் ரூ.200 வரை இருக்கும்.
பிரதமர் கிசான் மந்தன் யோஜனாவின் விதிகளின்படி, ஓய்வூதியக் கணக்கை எல்ஐசி நிர்வகிக்கும்.
பயனாளி 60 வயதுக்கு முன் இறந்துவிட்டால், பயனாளியின் மனைவி அல்லது நாமினிக்கு அந்தத் தொகையை டெபாசிட் செய்து திட்டத்தைத் தொடரலாம். மேலும் பயனாளி, இந்த PMKMY திட்டத்திலிருந்து வெளியேற விரும்பினால், அவர் டெபாசிட் செய்த தொகையை வட்டியுடன் திரும்பப் பெறுவார்.
60 வயதிற்குப் பிறகு பயனாளி இறந்தால், மனைவிக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகையில் பாதி, அதாவது ஆயிரத்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
வானிலை தகவல்:
வரும் 10ந்தேதி வரையிலான வானிலை! வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு!
ஓய்வூதியம் பெறுபவர் மற்றும் அவரது மனைவி இருவரும் இறந்தால், அந்தத் தொகை ஓய்வூதிய நிதிக்கு திரும்பும்.
விதிகளின்படி, பயனாளி தனது பெயரை திட்டத்தில் இருந்து திரும்பப் பெறலாம். திட்டத்தில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பயனாளி தனது பெயரை திரும்பப் பெற்றால், எல்ஐசி அனைத்து பணத்தையும் வட்டியுடன் பயனாளிக்கு திருப்பித் தரும்.
கிசான் மாந்தன் யோஜனாவின் பலன்கள் (Benefits of Kisan Maandhan Yojana)
ஒரு பயனாளி தனது ஓய்வூதிய பங்களிப்பை திட்டத்தில் இருந்து டெபிட் செய்ய விரும்பினால், அவர் அதை தேர்வு செய்யலாம்.
பிரதம மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 5.89 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 41 கோடி விவசாயிகளுக்கு இரண்டாம் தவணை இன்னும் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க:
தபால் அலுவலகத்தின் திட்டம்: முதிர்வு நேரத்தில் ரூ. 20 லட்சம் வரை பெறலாம்!
Share your comments