நீர்பாசன திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெற்ற விவசாயிகள் இலவச மின்சாரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் தமிழ்நாடு பிற்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தால் Tamil Nadu Backward Classes Economic Development Corporation Limited (TABCEDCO) செயல்படுத்தப்பட்டு வரும் மானியத்துடன் கூடிய நீர்பாசன கடன் திட்டத்தின் கீழ், வங்கி கடன் பெற்று, ஆழ்துளை கிணறு அமைத்து அதற்கு இணையாக மானியம் தொகை பெற்றுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் இலவச மின்சாரம் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதன் படி, மின் இணைப்பு பெற கடன் மற்றும் மானியம் பெற்றதற்கான வங்கி பாஸ் புத்தகம், இலவச மின் இணைப்பு கேட்டு பதிவு செய்த அட்டை நகல், 10(1) சிட்டா ஆகிய ஆவணங்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்பட்டோர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு https://sivaganga.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம், முழு விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்
மேலும் படிக்க..
Nivar Cyclone: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு - 13 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை!!
Nivar cyclone : புயல் காற்றில் இருந்து தென்னை மரங்களை பாதுகாப்பது எப்படி?
புயல் எச்சரிக்கை : பயிர் இழப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் - வேளாண் துறை!!
Share your comments