சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு 70 சதவீதம் மானிம் வழங்கப்படுகிறது. 30 சதவீதம் மட்டும் பணத்தை செலுத்தி சோலார் பம்பு செட் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சூரியசக்தி பம்பு செட்டுகள் (Solar pump sets)
வேளாண்மையில் நீா்ப் பாசனத்திற்கு தேவையான எரி சக்தியை உறுதி செய்யும் நோக்கத்துடன் 2013-14-ஆம் ஆண்டு முதல் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டாா் பம்பு செட்டுகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் அமைத்து கொடுத்து வருகிறது. சூரிய சக்தி பம்பு செட்டுகள் மூலம் மின் இணைப்பு தேவையின்றி பகலில் சுமாா் 8 மணி நேரம் பாசனத்துக்கு தடையில்லா மின்சாரம் பெற முடியும்.
70 சதவீதம் மானியம் (70% Subsidy)
இத்திட்டமானது மத்திய அரசின் 30 சதவீத மானியம் மற்றும் தமிழக அரசின் 30 சதவீத மானியம் என மொத்தம் 70 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதில் மீதம் உள்ள 30 சதவீதத்தை மட்டும் விவசாயிகள் செலுத்தி சோலாப் பம்பு செட்டை அமைத்துக்கொள்ளலாம்.
17,000 சோலார் பம்புசெட்டுகள் (Solar pumb sets)
2020-2021-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 17,500 மின்கட்டமைப்பு சாராத, தனித்தியங்கும் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்திட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
விலை பட்டியல் (Subsidy Tarriff)
5 எச்.பி. ஏசி மற்றும் 5 எச்.பி. டிசி சூரியசக்தியால் இயங்கும் நீா் மூழ்கி மோட்டாா் பம்பு செட்டு அமைப்பதற்கான மொத்த விலை முறையே ரூ. 2,37,947 மற்றும் ரூ.2,42,303 ஆகும். இதில் விவசாயிகளின் பங்களிப்பு 30 சதவீதமாகும். அதன்படி, முறையே ரூ.71,384 மற்றும் ரூ.72,691 ஆகும்.
7.5 எச்.பி. ஏசி மற்றும் 7.5 எச்.பி. டிசி சூரியசக்தியால் இயங்கும் நீா் மூழ்கி மோட்டாா் பம்பு செட்டு அமைப்பதற்கான மொத்த விலை முறையே ரூ.3,16,899 மற்றும் ரூ.3,49,569 ஆகும். இதில் விவசாயிகளின் பங்களிப்பு 30 சதவீதமாகும். அதன்படி, முறையே ரூ.95,070 மற்றும் ரூ.1,04,871 ஆகும்.
10 எச்.பி. ஏசி மற்றும் 10 எச்.பி. டிசி சூரியசக்தியால் இயங்கும் நீா் மூழ்கி மோட்டாா் பம்பு செட்டு அமைப்பதற்கான மொத்த விலை முறையே ரூ.4,37,669 மற்றும் ரூ.4,39,629 ஆகும். இதில் விவசாயிகளின் பங்களிப்பு 30 சவீதமாகும். அதன்படி, முறையே ரூ.1,31,301 மற்றும் ரூ.1,31,889 ஆகும்.மொத்த விலை என்பது நிறுவுதல் செலவு, வரிகள், 5 ஆண்டுகால பராமரிப்பு மற்றும் காப்பீடு செலவுகளை உள்ளடக்கியது.
விண்ணப்பிப்பது எப்படி? (How to apply)
இத்திட்டத்தின் மூலம் பயன் பெற ஆர்வமுடைய விவசாயிகள் சம்பந்தப்பட்ட வருவாடீநு கோட்டத்தில் உள்ள உதவிசெயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை (அல்லது) மாவட்ட செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்
மேலும் படிக்க...
இன்சுலின் செடி எனப்படும் சர்க்கரைக் கொல்லி சாகுபடி பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க...!
ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை - கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு!
ஓசூரில் ரூ.20 கோடி மதிப்பில் பன்னாட்டு மலர் ஏல மையம் - மலர் விவசாயிகள் மகிழ்ச்சி!
Share your comments