கரூர் மாவட்டம் க.பரமத்தியில், கால்நடை தீவன சந்தை அமைக்க நடவடிக்கை வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி (Farmers Demand) வருகின்றனர்
கரூர் மாவட்டம், க.பரமத்தி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பே பிரதான தொழிலாக உள்ளன.மேலும், மாடு, பசு, எருமை, வெள்ளாடு, செம்மறி ஆடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
தீவனப் பயிர்கள் சாகுபடி (Cultivation of fodder crops)
இதற்காக பலர் தங்கள் தோட்டத்தில் தீவனப் பயிர்களான கம்பு ஒட்டுப்புல், கினியாபுல், கொழுக்கட்டை புல் மற்றும் பயறு வகையில், வேலிமசால், குதிரைமசால், முயல் மசால், தீவனத் தட்டைப் பயறு போன்றவற்றை பயிரிட்டு கால்நடைகளுக்கு உணவாகக் கொடுத்து வருகின்றனர்.
இந்தத் தீவன பயிர்களை வளர்க்க நிலம் இல்லாத விவசாயிகள் சிலர் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து வளர்த்தும், தங்கள் கால்நடைகளை பராமரித்து வருகின்றனர். மேலும், கால்நடைகளை சாலையோரத்தில் மேயவிட்டு வளர்த்து வருகின்றனர்.
தீவன சந்தை (Fodder market)
எனவே, கால்நடைகளை விற்பனை செய்ய சந்தைகள் இருப்பதைப் போன்று, கால்நடை தீவனங்களை தயாரிக்கும் விவசாயிகளிடம், தீவனங்களை பெற ஏதுவாக தீவன சந்தை அமைக்க வேண்டும்.
கால்நடைகளை விற்பனை செய்ய பல்வேறு பகுதிகளில் சந்தைகள் உள்ளன. அதேபோல் போதுமான நிலம் இல்லாத நிலையில். அரசு இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் பெறப்பட்ட கால்நடைகளை வளர்க்க, தீவன சந்தை அமைக்க வேண்டும் என, கரூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...
இயற்கை பூச்சி விரட்டியான மோர்க்கரைசல் தயாரிப்பது எப்படி?
Share your comments