1. விவசாய தகவல்கள்

தென்னையை பாதுகாக்கும் பச்சை இறக்கை பூச்சி: விவசாயிகளுக்கு விற்பனை!

R. Balakrishnan
R. Balakrishnan
Green Winged Insect

பச்சை இறக்கை கண்ணாடி பூச்சிகளால், தென்னையில் ஏற்படும் வெள்ளை சுருள் ஈக்களின் சேதத்தை கட்டுப்படுத்தலாம். இதனை கிரைசோ பெர்லா இரைவிழுங்கி என்போம். இவற்றின் முட்டைகளை மதுரை விவசாய கல்லுாரியில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறோம். பூச்சிகளின் முட்டைகளை கருப்புத் துணி அல்லது பிரவுன் பேப்பரில் சேகரித்து அவற்றை நான்கு நாட்கள் வைத்தால் அவை புழுவாக மாறும். இந்த புழுக்களுக்கு உணவு வெள்ளை சுருள் ஈக்களின் முட்டை, புழு, லார்வா பருவம் தான். வயலில் விடும் போது இவற்றை காலிசெய்து விடும். ஆய்வகத்தில் வளர்க்கும் போது அரிசி புழுவின் (கார்சேரா) முட்டைகளை உற்பத்தி செய்து உணவாக வழங்குகிறோம்.

பச்சை இறக்கை கண்ணாடிபூச்சி (Green Winged Insect)

முட்டைகளை உற்பத்தி செய்வதற்காக அந்துபூச்சியை சல்லடை துளையுள்ள டிரம்மில் வளர்க்கிறோம். முட்டையிலிருந்து 35 நாட்களில் பூச்சியாக வரும். 95 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். சல்லடையில் இடும் முட்டைகளை சேகரித்து கழிவுகளை நீக்கி கிரைசோ பெர்லா புழுக்களுக்கு உணவளிக்கிறோம்.

இவை பச்சை இறக்கை கண்ணாடிபூச்சியாக உருமாறும் போது ஒரு டிரேயில் 200 பூச்சிகள் முட்டையிடத் தொடங்கும். 5 முதல் 10 நாட்கள் வரை ஒரு நாளைக்கு தினமும் 2000 முட்டை தொகுப்புகள் கிடைக்கும்.

குறைந்த விலை (Low Price)

1000 எண்ணிக்கையுள்ள முட்டை தொகுப்பை ரூ.300க்கு விவசாயிகளுக்கு விற்கிறோம். முட்டையிட்ட உடனே மரத்தில் கட்டிவிட வேண்டும் என்பதால் விவசாயிகளின் ஆர்டருக்கு ஏற்ப முட்டைகளை உற்பத்தி செய்கிறோம். இந்த முட்டைகளை வெள்ளை சுருள் ஈ தாக்கியுள்ள மரத்தில் இணைத்து விடவேண்டும். முட்டையிலிருந்து புழு வெளிவரும் போது சுருள் ஈக்களின் வம்சத்தை துவம்சம் செய்து விடும்.

இதன் கொடுக்கு போன்ற வாய் அனைத்தையும் உறிஞ்சி எடுப்பதால் சுருள் ஈக்களின் சேதத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். அடுத்து லார்வா பருவத்திலிருந்து பூச்சியாகி அங்கேயே இனப்பெருக்கம் செய்து ஈக்களை கட்டுப்படுத்தும். இது மிக எளிமையான உயிரியல் முறையிலான தாக்குதல் என்பதால் மரத்திற்கோ காய்களுக்கோ எந்த தீங்கும் ஏற்படாது. இறக்கை பூச்சிகள் மரத்திற்கு சேதம் ஏற்படுத்தாது.

- சாந்தி, பேராசிரியர்
பூச்சியியல் துறை
விவசாய கல்லுாரி,
மதுரை
88259 15731

மேலும் படிக்க

தேங்காய்க்கு உரிய விலை வேண்டும்: தென்னை விவசாயிகள் வேண்டுகோள்!

அடிப்படை வசதிகளுடன் உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்படும்: வேளாண் இயக்குனர் அறிவிப்பு!

English Summary: Green winged insect that protects coconut: for sale to farmers! Published on: 27 January 2022, 02:36 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.