தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கனமழை (Heavy rain)
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மிதமான மழை (Moderate rain)
ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
13.09.21 மற்றும் 14.09.21
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
15.09.21
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
16.09.21
மிதமான மழை (Moderate rain)
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மழைபதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வடமேற்கு அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
12.09.21
மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுப்படுகிறார்கள்.
14.09.21 வரை
வட மேற்கு வங்ககடல் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடலோர பகுதிகள், வட ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12.09.21 மற்றும் 13.09.21
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள் (Areas of the Arabian Sea)
16.09.21 வரை
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இன்று மெகா தடுப்பூசி முகாம்; தமிழகத்தில் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டம்!
வருமான வரி தாக்கல் செய்வதில் தொடரும் சிக்கல்: காலக்கெடு நீட்டிப்பு!
Share your comments