விவசாயிகளுக்கு ஏற்படும் வேளாண் தொழில்நுட்ப சந்தேகங்கள் மற்றும் தடையின்றி வேளாண் இடுபொருட்களைப் பெற தொலைப்பேசி மூலம் வேளாண் துறையினரை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடுபொருட்களை தடையின்றி பெறலாம்
தருமபுரி மாவட்டத்தில் இடுபொருட்கள், விதை, உரம் தடையின்றி கிடைக்க வேளாண் உதவி இயக்குநர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வசந்தரேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழலில் வேளாண் பணிகளுக்கான இடுபொருட்கள், விதை, உரம் ஆகியவை வேளாண் விரிவாக்க மையங்கள், விதை, உரம் விற்பனை செய்யும் தனியார் விற்பனை மையங்களில் தடையின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு சூழலால் வேளாண் அலுவலர்கள் விவசாயிகளை சந்தித்து வேளாண் தொழில் நுட்பங்களை விளக்கவும், மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கவும் முடியாத நிலை உள்ளது.
இருப்பினும் இதுபோன்ற விவரங்களை விவசாயிகள் அந்தந்த பகுதிக்கான வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
இதற்காக, தருமபுரி -9442235265, பென்னாகரம்-8526719919, காரிமங்கலம்-9443207571, பாலக்கோடு- 9080300345, நல்லம்பள்ளி-9443635600, அரூர்-9443573870, மொரப்பூர்-9150264477, பாப்பிரெட்டிப்பட்டி-9443081440 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பழைய விலைக்கே உரம் விற்பனை
அதேபோல, டிஏபி உரமானியத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. எனவே, பழைய விலைக்கே தற்போது உர விற்பனை நிலையங்களில் டிஏபி கிடைக்கும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் தரக்கட்டுப்பாட்டு பிரிவு வேளாண் உதவி இயக்குநரை 94435 63977 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி உதவி வேளாண் அலுவலர்கள் விவரம்
இதேபோல், வேளாண் துறையின் தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு தொலைபேசி வாயிலாக பெற வசதியாக, பொள்ளாச்சி தெற்கு வட்டார வேளாண் துறை சார்பில் உதவி வேளாண் அலுவலர்களின் மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கோலார்பட்டி - கந்தசாமி - 98429 71591; அம்பராம்பாளையம் - சண்முகம் - 95006 22248; சோலபாளையம் - செல்வம் - 80723 82408; கோமங்கலம்புதுார் - செல்வராணி - 99947 00883; சமத்துார் சுற்றுப்பகுதி - சரண்யா - 89408 92983; தொண்டாமுத்துார் - ஆனந்தபாபு - 76676 76077 ஆகியோரை அந்தந்த சுற்றுப்பகுதி விவசாயிகள் தொடர்பு கொண்டு ஆலோசனை, மானிய திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். அவர்களை தொடர்பு கொள்ள இயலாத சூழலில், துணை வேளாண் அலுவலர் ரவிதினகர் - 98943 12104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க.....
வேளாண் சார்ந்த ஆலோசனைகளை வீட்டில் இருந்து தொலைபேசி மூலம் பெறலாம் - வேளாண் துறை தகவல்!!
வேளாண் பணிகளை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை: விவசாயிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!
Share your comments