1. விவசாய தகவல்கள்

பயிர் விளைச்சலை அதிகரிக்கும் TNAU-வின் ஊட்டச்சத்து டானிக்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
பயிர் விளைச்சலை அதிகரிக்கும் டானிக்

பயிர்களின் மகசூலை பாதிப்பதில் நிறைய காரணிகள் அங்கம் வகுக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ஊட்டச்சத்துக் குறைபாடு. பருவநிலை மாற்றங்கள் மண்ணின் தன்மை மற்றும் பயிர்களுக்கு ஏற்ப நாம் இடுகின்ற இடுபொருட்கள் முழுமையாக பயிர்களுக்கு சேராமல் வீணாகின்றது. எனவே விவசாய பெருமக்கள் இடுபொருட்கள் வீணாவதை தடுக்க நவீன தொழில் நுட்பங்களை தேரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இடுபொருட்கள் செலவை குறைப்பதுடன் மண் வளத்தையயும் பாதுகாக்க முடியும்.

ஊட்டச்சத்து டானிக்            

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பயறு வகைகள் நிலக்கடலை பருத்தி கரும்பு மற்றும் மக்காச்சோளம் பொன்றவற்றில் விளைச்சலை அதிகரிக்க ஊட்டச்சத்து டானிக் உற்பத்தி செய்கிறது. இந்த டானிக்கில் பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அடங்கியயுள்ளன. ஊட்டச்சத்து டானிக்கை இலை வாரியாக தெளித்து விளைச்சலை அதிகரிக்கலாம்.

TNAU தென்னை டானிக்

தென்னைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த டானிக். ஒரு வருடத்திற்கு இரண்டு பாக்கெட் (200 மி.லி.) டானிக்கை 6 மாத இடைவேளியில் வேர் மூலம் கொடுக்க வேண்டும்.

பயன்கள்

  • பச்சையம் அதிகரிக்கும்

  • ஒளிச்சேர்க்கை திறன் கூடும்

  • பாளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்

  • குரும்பை கொட்டுதல் குறையும்

  • காய்கள் பெரிதாகி பருப்பு எடை கூடும்

  • விளைச்சல் 20 சதம் வரை அதிகரிக்கும்

  • பூச்சிஇ நோய் எதிர்ப்பு சக்தி கூடும்

TNAU பயிறு ஒன்டர்

பயிறு வகைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர். பயிறுவகைப் பயிர்களில் வேர் முடிச்சுகள் மூலம் தழைச்சத்தை நிலைநிறுத்தும் தன்மை உள்ளது. இந்தச் செயல்பாட்டுக்கு மாவுச்சத்து தேவைப்படும். அதே சமயம் விதைகளுக்கும் மாவுச்சத்து தேவைப்படும். ஆகவே இந்த இரண்டு தேவைகளையயும் சரியாகப் பூர்த்தி செய்தால் தான் நல்ல விளைச்சல் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு தேவையான 2 கிலோ TNAU பயறு ஒன்டரை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பூக்கும் தருணத்தில் ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்.

பயன்கள்

  • பூக்கள் உதிர்வது குறையும்

  • பயிறு விளைச்சல் 20 சதம் வரை கூடும்

  • வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும்

TNAU நிலக்கடலை ரிச்

நிலக்கடலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர். நிலக்கடலை ரிச் பூஸ்டரை  ஏக்கருக்கு 2கிலோ 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பூக்கும் தருணத்தில் மற்றும் காய் பிழக்கும் பருவத்தில் தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்த்து இலை வாரியாக தெளிக்க வேண்டும்.

பயன்கள்

  • அதிக பூ பிடிக்கும் திறன்

  • குறைந்த பொக்கு கடலைகள்

  • விளைச்சல் 15 சதம் வரை கூடும்

  • வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும்

TNAU பருத்தி பிளஸ்

பருத்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர். ஒரு ஏக்கருக்கு தேவையான 2.5 கிலோ கரைசலை 200 லிட்டர் தண்ணீர் கலந்து பூக்கும் மற்றும் காய் பிழக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்த்து இலை வாரியாக தெளிக்க வேண்டும்.

பயன்கள்

  • பூ மற்றும் சப்பைகள் உதிர்வது குறையும்

  • காய்கள் முழுமையாக வேடித்து, சீரான அறுவடைக்கு வழி வகுக்கிறது

  • விளைச்சல் 18 சதம் வரை அதிகரிக்கும்

  • வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும்

TNAU கரும்பு பூஸ்டர்

கரும்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர். ஏக்கருக்கு 1 -  1.5 மற்றும் 2  கிலோ முறையே கரும்பு நட்ட 45 - 60 மற்றும் 75 ஆவது நாட்களில் 200 லிட்டர் தண்ணீருடன் தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்த்து தெளிக்க வேண்டும்.

பயன்கள்

  • இடைக்கணுக்களின் நீளம் கூடும்

  • கரும்பின் வளர்ச்சி மற்றும் எடை அதிகரிக்கும்

  • விளைச்சல் 20 சதம் வரை அதிகரிக்கும்

  • சர்க்கரை கட்டுமானம் கூடும்

  • வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும்

TNAU மக்காச்சோள மேக்சிம்

மக்காச்சோளத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்

பயன்கள்

  • மணி பிடிக்கும் திறன் அதிகரிக்கும்

  • விளைச்சல் 20 சதம் வரை கூடும்

  • வறட்சியைத் தாங்கும் திறன் அதிகரிக்கும்

பயன்படுத்தும் முறை

  • அளவு :       ஏக்கருக்கு 3 கிலோ

  • தெளிப்பு திரவம் :       200 லிட்டர்

  • தெளிக்கும் பருவம் :       ஆண் மஞ்சரி மற்றும் மணி உருவாகும் பருவம்

  • தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்

கவனிக்க வேண்டியவை

  • செடிகள் நன்கு நனையயுமாறு தெளிக்க வேண்டும்.

  • மாலை வேலையில் தெளிக்க வேண்டும்.

  • கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவும்.

  • நல்ல நீரை பயன்படுத்தவும்.

  • பூச்சி மற்றும் நோய் மருந்துகளுடன் கலந்து தெளிக்கக்வுடாது.

எனவே சீரிய தொழில் நுட்பங்களான இரகம் விதை நெர்த்தி விதைப்பு முறை பயிர் எண்ணிக்கை பராமரிப்பு ஒருங்கிணைந்த பயிர்ப்பராமரிப்பு இவற்றுடன் இலை வழி ஊட்டச்சத்துக்களை இடுவதை கடைப்பிடித்தால் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் விபரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்

பயிர் வினையியல் துறை

பயிர் மேலாண்மை இயக்ககம் கோயம்புத்தூர் – 641 003

தொலைபேசி: 0422 - 6611243 மின் அஞ்சல் : physiology@tnau.ac.in

தகவல்

முனைவர். ச. நித்திலா

மேலும் படிக்க...

வாழையின் விலை வழக்கத்தைப் போல நிலையாக இருக்கும்- TNAUவின் கணிப்பு!

மிளகாய் வற்றலுக்கு ரூ.9000/- வரை கிடைக்கும்- TNAUவின் விலை முன்னறிவிப்பு!

 

English Summary: Here the list of TNAU's Crop boosters which increase crop yields! Published on: 01 October 2020, 11:55 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.