பிச்சிப்பூ போலவே காணப்படும் நட்சத்திர மல்லிகை கோ 1. கோவை வேளாண்மை பல்கலைகழகத்தால் வெளியிடப்பட்ட (ஜாஸ்மினம் நிட்டிடம்) இந்த ரகம் ஆண்டு முழுவதும் பூக்கும்.
நட்சத்திர மல்லிகை (Star Jasmine)
பருவமில்லா நவம்பர் - பிப்ரவரியிலும் மலர்கள் பூக்கும். 5 ஆண்டு வயதுடைய செடியின் மகசூல் (Yield) ஆண்டுக்கு எக்டேருக்கு 7.5. டன் அளவு கிடைக்கும். இந்த மலரின் மொட்டுக்கள் ஜாதி மல்லியை போன்று தடிமனாக இளம் சிவப்பு நிறமாக இருக்கும். விரிந்த மலர்கள் வெண்ணிறமாக பளிச்சென்று காணப்படும். அறை வெப்ப நிலையில் 12 மணி நேரமும் குளிரூட்டப்பட்ட சூழலில் 60 மணி நேரம் தாக்குபிடிக்கும். இதமான நறுமணம் கொண்டவை. இச்செடிகளை பூச்சி மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. செடிகள் அழகிய வடிவத்தில் உள்ளதால் அலங்கார தோட்டம் அமைப்பதற்கும் ஏற்றது.
நடவு
நல்ல வடிகால் வசதி கொண்ட நிலத்தில் மிதமான வெப்பம், மழை, சூரிய ஒளி இருந்தால் போதும். ஜூன், நவம்பரில் நடவு செய்யலாம்.
2க்கு 1.5 மீட்டர் இடைவெளியில் எக்டேருக்கு 3300 செடிகள் நடலாம். நடும் முன்பாக அடி உரமாக குழிக்கு 10 கிலோ தொழுஉரம் இடவேண்டும். ஜூன் மற்றும் ஜனவரியில் 30:60:60 என்ற விகிதத்தில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை நுண்ணுாட்ட சத்துக்கள் இடவேண்டும். நுண்ணூட்டச் சத்துக்கள் குறைபாடு வெளிப்படும்போது 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.
மாலதி,
உதவி பேராசிரியை
ஜெகதாம்பாள்
ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை அறிவியல் நிலையம்
சந்தியூர், சேலம் - 636 203
97877 13448
மேலும் படிக்க
பயிர்களுக்கான மண் வளத்தை பராமரிக்கும் முறைகள்!
ஒரே செடியில் 2 காய்கறிகள்: அசத்திய ஆராய்ச்சியாளர்கள்!
Share your comments