1. விவசாய தகவல்கள்

அதிக மகசூல் தரும் வியட்நாம் பலாப்பழம்: வீட்டிலேயே வளர்க்கலாம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Viatnam Jack Fruit

வியட்நாம் பலாப்பழம் தற்போது, தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பலாப்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த பட்டயம் படித்த முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன் பல தகவல்களை கூறியுள்ளார்.

வியட்நாம் பலாப்பழம் (Viatnam Jack Fruit)

வியட்நாம் பலாப்பழங்களை வயல் மற்றும் தொட்டிகளில், சாகுபடி செய்யலாம். இது, வியட்நாம் இயர்லி ஜாக் புரூட் என பெயருக்கு ஏற்றாற் போல, விரைவில் மகசூல் கொடுக்ககூடிய ஒட்டு ரக பலாப் பழமாகும்.

இந்த பலாப்பழத்தை நிலத்தில் நட்டால், ஏறக்குறைய ஒன்றரை ஆண்டில் மகசூல் கொடுக்க துவங்கி விடும். தொட்டிகளில் சாகுபடி செய்தால் இரண்டரை ஆண்டில் மகசூல் கொடுக்க துவங்கும்.

முதலில் குறைந்த எண்ணிக்கையில் பழங்கள் கிடைக்கும். செடிகள் வளர வளர கூடுதல் எண்ணிக்கையில் பலாப்பழங்கள் மகசூல் கொடுக்கும். இதில் சாகுபடி செய்யப்பம் ஒரு பழம், ஐந்து கிலோ எடை வரையில் இருக்கும். இன்றைய கால கட்டத்தில் இருக்கும்.

சிறிய குடும்பம் சாப்பிடுவதற்கு ஏற்ற பழம் எனலாம். இந்த பழத்தில் கிடைக்கக் கூடிய சுவை, வேறு எந்த ஒரு பலாப்பழத்திலும் கிடைக்காது என்றும் அவர் கூறினார்.

பி. கிருஷ்ணன்
98419 86400

மேலும் படிக்க

நம் மண்ணில் விளைகிறது பெங்களூரு தக்காளி!

மண்வளம் காக்க தென்னை நாரில் கிப்ட் பேக்: மாற்றத்துக்கான வழி!

English Summary: High-yielding Vietnamese Jack Fruit: can be grown at home! Published on: 09 June 2022, 12:38 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.