வேலூரில், இயற்கை முறையில் விளைவித்த விளைபொருட்களை நுகர்வோரின் வீடுகளுக்கேக் கொண்டுசென்று, நேரடியாக விற்பனை செய்யும் பணிகளை இயற்கை சான்றிதழ் பெற்ற உழவர் சங்கம் தொடங்கியுள்ளது.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த இயற்கை சான்றிதழ் பெற்ற உழவர் சங்கத்தின் தலைவராக கோ.புருஷோத்தமன், துணைத் தலைவராக எஸ்.எம்.கனகசபாபதி, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சங்கத்தின் நோக்கம் (Target)
இயற்கை விவசாயம் செய்யும் உழவர்களுக்கு இந்திய அரசின் பிஜிஎஸ் இயற்கை சான்றிதழ்களை பெற்றுத் தருவது, இயற்கை வேளாண்மையை மேலும் மேம்படுத்துவது, கூடுதல் விலையில் விளைபொருள்களை விற்பனை செய்ய வழிகாட்டுவது, ஏக்கருக்கு ரூ.10ஆயிரம் அரசு மானியம் பெறுவது, மண்ணின் அங்ககக் கனிம வளத்தை ஏற்கெனவே இருந்தபடி 12 சதவிதத்துக்கு உயர்த்துவது ஆகியவை இந்த சங்கத்தின் நோக்கங்கள் ஆகும்.
இதுதவிர, இயற்கை விவசாயிகளின் விளை பொருள்களை பெற்று நுகர்வோர் இல்லங்களுக்கு ஆட்டோக்கள் மூலம் நேரடியாக விற்பனை செய்யவும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
9894784863 என்ற அலைபேசி மூலம் நுகர்வோர் தொடர்புகொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த உழவர் சங்கத்தின் இந்த முயற்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் படிக்க...
வேம்பு நடவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.18,000மானியம்- விவசாயிகளுக்கு வாய்ப்பு!
காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை - ராமநாதபுரம் விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments