வேப்பம் பட்டியில் உள்ள மக்காச்சோள விவசாயிகளுக்கு படைப்புழு தாக்குதலில் இருந்து பயிரை எங்ஙனம் காப்பது என மதுரை வேளாண் கல்லுாரி மாணவர்கள் விளக்கம் அளித்தனர். அதில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்கள் கொடுக்கப் பட்டன.
படைப்புழு உருவாக்கம் மற்றும் கட்டுப்படுத்தும் முறை
- படைப்புழுக்கள் இலையின் அடிப்பாகத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான முட்டைகள் இட்டு புழுக்கள் வெளி வரும். அவை இலைகளில் உள்ள பச்சையத்தை உண்பதால் இலைகள் அனைத்தும் பச்சையத்தை இழந்து வெண்மை நிறமாக மாறி விடுகிறது.
- படைப்புழுக்களின் ஆயுள் 30 நாட்கள் மட்டுமேயாகும்.
- ஒரே பயிர் சாகுபடி செய்வதை தவிர்த்து சுழற்சி முறையில் சாகுபடி செய்வதன் மூலம் கட்டுப்படுத்த இயலும்.
- எக்டேருக்கு 15 இனக் கவர்ச்சி பொறிகளை வைத்து ஆண் அந்துப்பூச்சியை அழிக்கலாம்.
- சூரியகாந்தி, ஆமணக்கு, எள் போன்றவற்றை வரப்பு பயிர்களாகவும், உளுந்து, தட்டைப்பயறு போன்றவற்றை ஊடுபயிராகவும் சாகுபடி செய்வதன் மூலம் கனிசமான புழுக்களை கட்டு படுத்த இயலும்.
Share your comments