தரமான விதையை உரிய காலத்தில் விநியோகித்தால் மட்டுமே உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளோம். பரிசோதனையின் மூலம் விதைகளின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. விதைத்தரத்திற்கு உட்பட்டு சான்றளிப்புக்கு ஏற்றது தானா என கண்டறியலாம். அதற்கேற்ப விலையை நிர்ணயிப்பதால் நுகர்வோர் தரம் அறிந்து பெற முடியும்.
விதைச்சட்டம் அமலாக்கத்திற்கு பயன்படுகிறது.
இனத்துாய்மை
வயலில் இருந்து கிடைக்கும் விதைகளில் மண், சிறுகற்கள், இலைத்துகள்கள், குச்சி மற்றும் பொக்கு விதைகள் கலந்து இருக்கும். இவற்றை சுத்திகரிக்க வேண்டும். புறத்தூய்மை என்பது குறிப்பிட்ட பயிர் விதையைத் தவிர பிற பயிர், களை விதைகள் இருக்கக்கூடாது.
இனத்தூய்மை என்பது தாயாதிப் பயிரின் மரபியல் குணங்களை விதைகள் ஒத்திருக்க வேண்டும். இதனால் அதிக விளைச்சலும், வம்சாவழியின் குணங்களும் கிடைக்கும். கரு, வல்லுனர் விதைகள் 100, ஆதார விதை 99.5, சான்று விதை 99 சதவீதம் இனத்துாய்மை கொண்டிருக்க வேண்டும்.
நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகளை விதைகளால் பயிர் எண்ணிக்கை அதிகரிக்கும். விதைச்சட்டம் 1966 பிரிவு 7ன்படி ஒவ்வொரு பயிருக்கும் முளைப்புத்திறன் சதவீதம் வேறுபடும். நெல், எள்ளில் 80 சதவீதம் முளைப்புத்திறன் இருக்க வேண்டும்.
ஈரப்பதம்
சரியான ஈரப்பத நிலையில் உள்ள விதைகளை பூச்சி, பூஞ்சாண தாக்குதல் இன்றி நீண்ட நாட்கள் சேமிக்கலாம். நீண்டகால சேமிப்புக்கு 8, அதற்கு குறைவான கால சேமிப்புக்கு 10 - 13 சதவீத ஈரப்பதம் இருக்க வேண்டும்.
விதை மாதிரிகளை எடுத்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள விதைப் பரிசோதனை நிலையத்தில் தரலாம். தேனி விற்பனைக்குழு அலுவலக வளாகத்தில் இம்மையம் செயல்படுகிறது. வீரிய விதைகளின் விலை அதிகம் இருப்பதால் பரிசோதனைக்கு தேவையான அளவு விதைகளை மட்டும் அனுப்பினால் பண இழப்பை தவிர்க்கலாம்.
தேவையான அளவு
வெங்காயம், காரட், நுால்கோல், காலிபிளவர், முட்டைக்கோஸ், தக்காளி ரகம், ஒட்டுரகம், மிளகாய், கத்தரி, டர்னிப் விதைகள் 10 கிராம் பரிசோதனைக்கு கொண்டு வந்தால் போதும்.
கேழ்வரகு, கம்பு, எள் 25 கிராம், நெல், கீரை, பீட்ரூட், முள்ளங்கி, சணப்பு 50 கிராம். வெள்ளரி, உளுந்து, பூசணி, வெண்டை, பாசிப்பயறு, கொள்ளு, சோளம், தர்பூசணி, சூரியகாந்தி ரகம் மற்றும் ஒட்டுரகம், சுரை, சீனிஅவரை , பருத்தி ஒட்டு பஞ்சு நீக்கியது 100 கிராம். துவரை, தட்டைப்பயறு, பீர்க்கு, சோயா பீன்ஸ், பருத்தி ரகம் பஞ்சு நீக்கியது 150 கிராம்.
பருத்தி ஒட்டு பஞ்சு உள்ளது 200, புடல், பட்டாணி, ஆமணக்கு, பாகல் 250கிராம், பருத்தி ரகம் பஞ்சு உள்ளது 350 கிராம், கொண்டக்கடலை, கொத்தமல்லி 400 கிராம், பிரெஞ்சு, அவரை 450 கிராம் மற்றும் நிலக்கடலை, மக்காச்சோளம் 500 கிராம் விதைகளை மட்டும் அனுப்பினால் பரிசோதனை செய்து தரப்படும். இதற்கு கட்டணம் உண்டு. தரமான விதைகளை பரிசோதித்து விதைத்தால் விளைச்சலும் அதிகரிக்கும்.
சத்தியா, வேளாண்மை அலுவலர்
சிங்கார லீனா
விதை பரிசோதனை அலுவலர்
சுக்குவாடன்பட்டி, தேனி
96775 31161.
மேலும் படிக்க
Share your comments