1. விவசாய தகவல்கள்

விதை உற்பத்தியில் பிற ரக கலப்பினை தவிர்ப்பது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
How to avoid other varieties of hybrids in seed production?

தரமான விதை உற்பத்தியில் கலப்பு பயிர்களை உரிய நேரத்தில் தகுந்த முறையில் நீக்குவதன் மூலம் மட்டுமே, விதையின் தரத்தை வயலில் பேணிக்காக்க முடியும்.

சான்று பெற்ற விதைகள் (Certified seeds)

கலப்பு பயிர்களை வயலில் நீக்குவது மிக முக்கியமான ஒன்றாகும்.
விதைப் பண்ணை அமைக்க விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை அரசு அங்கீகாரம் பெற்ற விற்பனை மையங்களில் இருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.

கண்காணிப்பு (Tracking)

விவசாயிகள் அதிக அளவில் விதைகளை வாங்கும் போது அனைத்து மூட்டைகளும் ஒரே ரகமாக உள்ளனவா? என்பதைக் கண்காணிப்பது மிக மிக முக்கியம்.

பிரித்து எடுத்தல்  (Separation)

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரகங்கள் வாங்கும் பொழுது அவற்றை தனித் தனியே வைத்துப் பயன்படுத்துவது சிறந்தது.

  • மிக முக்கியமாக நாற்று விடுவதற்கு தயார் செய்யும்போது, ரகங்கள் கலந்து விடாமல் இருக்க வெவ்வேறு தேதிகளில் மற்றும் இடங்களில் , நாற்றுவிட்டு வெவ்வேறு தினங்களில் நாற்று பிரித்து நட வேண்டும்.

  • நடவு முடிந்து மீதமுள்ள நாற்றுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

கலவன்கள்

  • மேலும் விதைச்சான்று அலுவலர்கள் வயல் ஆய்வின்போது கலவன்கள் இருப்பது குறித்து தெரிவிப்பார்கள்.

  • அப்போது கலவன்களின் அடையாளங்களை விதைச்சான்று அலுவலர்களிடம் இருந்துக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

  • பின்னர், அதனை, கலவன் நீக்கும் பணியில் ஈடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரகங்கள் மற்றும் அதன் அம்சங்கள் குறித்த அடையாளங்களை காண்பித்து அதில் கலப்பு பயிர்கள் நீக்குவது பற்றி புரியும்படி எடுத்துக் கூறுவது அவசியம்.

கலவன் நீக்குதல்

காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும் மற்றும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் மட்டுமே கலவன் நீக்கம்பணியினை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அகற்றப்பட்ட கலப்பு பயிர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

அறுவடை (Harvest)

இவ்வாறு நன்கு முற்றிய பயிரை ரகம் வாரியாக தனித்தனியே அறுவடை செய்து அடித்துக் காய வைக்க வேண்டும்.

சுத்தம் (Cleaning)

முக்கியமாக கதிரடிக்கும் மற்றும் உலர வைக்கும் இடத்தை முழுமையாக நன்கு சுத்தம் செய்து அதன் பின்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நன்கு காய வைத்த விதைகளை புதிய சாக்கு கைகளில் மட்டுமே சேமித்து மூட்டைகளின் மேல் ராகத்தின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

இது போன்ற வழிமுறைகளை பின்பற்றினால் விதை உற்பத்தியில் கலப்பினை தவிர்த்து நல்ல விதைகளை உற்பத்தி செய்யலாம்.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல்- அரசு அதிரடி முடிவு!

வாழைப்பழத்திற்கு இந்த ஆண்டு என்ன விலை கிடைக்கும்? TNAU கணிப்பு!

English Summary: How to avoid other varieties of hybrids in seed production? Published on: 19 October 2021, 08:19 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.