வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகவேண்டும் என்பதே விவசாயம் செய்யும் ஒருவருடைய இலக்காக இருக்கும். அவ்வாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
கூட்டுறவு வங்கிகள் (Cooperative Banks)
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 4,000க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளது.
எல்லைக்குள் வசிக்க வேண்டும் (Must live within boundaries)
பொதுவாக ஒரு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்றால் அந்த சங்கத்தின் செயல் எல்லையில் வசிப்பவராக இருக்க வேண்டும். இல்லையெனில் அந்த கூட்டுறவு சங்கத்தின் அன்றாட செயல்கள் தொடர்பான செயல்களை நீங்கள் அந்த செயல் எல்லையில் நடத்துபவராக இருக்க வேண்டும்.
நிலம் அவசியம் (Land is essential)
உதாரணமாக நீங்கள் ஒருத் தொடக்க வேளாண்மை சங்கத்தின் உறுப்பினராக வேண்டுமெனில் அந்த சங்கம் செயல்படும் ஒரு வருவாய் கிராமத்தில் உங்களுக்கு வேளாண் நிலம் இருக்க வேண்டும்.
தடையில்லா சான்று ((No objection certificate))
அதுவே வெவ்வேறு கிராமங்களில் உங்களுக்கு நிலம் இருந்து, நீங்கள் அந்த சங்கத்திலும் உறுப்பினராக வேண்டும் என்றால் முதலில் சேர்ந்த சங்கத்தில் இருந்து தடையில்லாச் சான்று (No objection certificate) வாங்கி சமர்ப்பிக்க வேண்டும்.
வாக்களிக்கும் தகுதி (Eligibility to vote)
அதே சமயம் ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே செயல்பாடு தொடர்பான சங்கத்தில் நீங்கள் உறுப்பினராக இருந்தால் ஏதேனும் ஒரு சங்கத்தில் மட்டுமே வாக்களிக்கும் தகுதி பெற முடியும்.
ஒரு சங்கத்தில் (In an association)
அதாவது நிர்வாக குழு உறுப்பினராகவோ அல்லது தலைவராகவோ ஒரு சங்கத்தில் மட்டுமே நீங்கள் நீடிக்க முடியும். அதேசமயம் பிற சங்கங்களில் இருந்து உங்களுக்குத் தேவையான உரம் மற்றும் பணத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
பல சங்கங்கள் (Many associations)
இதேபோல் தொடக்க நிலையில் வீட்டுவசதி சங்கங்கள், மீன்பிடி சங்கங்கள், நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள், தொழிற் கூட்டுறவு சங்கங்கள் என பல துறைகளில் தொடக்க நிலை சங்கங்கள் உள்ளன.
முதன்மை உறுப்பினர் (A Class Member)
தொடக்க வேளாண்மை வங்கியில் நிலம் யார் பெயரில் இருக்கிறதோ அவர் முதன்மை உறுப்பினராக (A class member) சேரலாம். நில உரிமையாளர் நேரடியாக வர முடியாத பட்சத்தில் (அவர் முதலில் நேரில் வந்து உறுப்பினர் ஆகி இருக்க வேண்டும்.
இணை உறுப்பினர் (B Class Member)
அவர் ஒருவேளை, நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு இருந்தாலோ, வெளியூர் வெளிநாட்டில் இருந்தாலோ அல்லது பணம் - பொருளாதார குற்றங்களுக்குச் சிறை தண்டனை பெறாமல் மற்ற காரணங்களுக்காக அல்லது சிவில் வழக்கில் சிறை தண்டனை பெற்று இருந்தாலும் அவரது மனைவி, மகன், மகள் இணை உறுப்பினராகி (B class member) கடன் வசதிகளைப் பெறலாம்.
வயது வரம்பு (Age limit)
வழக்கம்போல 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உறுப்பினராகச் சேரலாம்.
மேலும் படிக்க...
வெறும் 4% விவசாயிகளே வேளாண் பண்ணைய முறைகளைப் பின்பற்றுகிறார்கள்-ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
நாட்டு ரக விதைகள் வேண்டுமா? - இங்கே இலவசமாகக் கிடைக்கும்!
தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளன- வேளாண்மை இணை இயக்குநர் தகவல்!
Share your comments