1. விவசாய தகவல்கள்

நெற்பயிாில் கதிர்நாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

R. Balakrishnan
R. Balakrishnan
How to control rice earhead bug

நெற்பயிரில் கதிர்நாவாய் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டம் கல்யாண சுந்தரபுரம் கிராமத்தில் நெற்பயிரை ஆய்வு செய்யும் பொழுது கதிர் நாவாய் பூச்சி தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கதிர் நாவாய் பூச்சி தாக்கப்பட்ட வயல்களில் உள்ள கதிர்கள் அனைத்தும் பதராக இருந்தது. கதிர் நாவாய் பூச்சி வகைகள் சாறு உறிஞ்சும் இனத்தை சேர்ந்தது.

பயிர்களுக்கு சேதம் (Crop Damage)

நெற்பயிரில் பால் பிடிக்கும் தருணத்தில் இந்த பூச்சிகளின் தாக்குதல் தென்படும். கூர்மையான வாய் உறுப்பை வைத்து நெற்பயிரில் உள்ள பால்கள் அனைத்தையும் உறிஞ்சி மணியில் சிறு சிறு புள்ளிகள் தென்படுவதை பார்க்க முடியும். நெல் வயலில் இந்த பூச்சிகள் இருக்கும் போது ஒருவித துர்நாற்றத்தை உணர முடியும்.

இந்த பூச்சி 250 முதல் 300 முட்டைகளை இடும் தன்மையுடையது. முட்டையிலிருந்து 7 நாட்களுக்குள் நாவாய்ப் பூச்சிகள் வெளிவரும். வெளிவந்த நாவாய் பூச்சிகள் 5 நிலைகளாக உருமாறி முதிர்ந்த நாவாய்ப் பூச்சிகள் அனைத்துமே பயிருக்கு சேதத்தை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் யுக்திகள் (Control methods)

நாவாய்ப் பூச்சிகளை இயற்கையாக கவர்ந்து அழிக்க ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம். வசம்பு தூளை வயலில் தூவுவதன் மூலம் நாவாய்ப்பூச்சிகளை தவிர்க்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க

இயற்கை விவசாயத்தில் நஞ்சில்லாப் பழங்களை சாகுபடி செய்யும் மதுரை விவசாயி!

இ-நாம் திட்டத்தால் நெல் வரத்து அதிகரிப்பு: விவசாயிகளுக்கும் கூடுதல் பலன்!

English Summary: How to control rice earhead bug attack on paddy? Published on: 24 February 2022, 08:48 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.