1. விவசாய தகவல்கள்

கிசான் அட்டை பெறுவது எப்படி? இதன் வட்டி விகிதம் என்ன? அறிக!

Deiva Bindhiya
Deiva Bindhiya
How to get Kisan card? Full Details: கிசான் கடன் அட்டை

கிசான் கடன் அட்டை என்பது விவசாய கடன் அட்டை ஆகும். இதன் நோக்கமே பயிர் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்குதல் போன்ற சிறு அளவிலான பண தேவைகளை அதிக சிரமமின்றி உடனுக்குடன் வங்கி அமைப்புகளிலிருந்து பெற்றுத்தருவதே ஆகும்.

கிசான் அட்டை பெறும் வழிமுறை:

கிசான் கடன் அட்டை பெறுவதற்கு முதலில் அருகில் உள்ள பொதுத்துறை வங்கிகளை அணுக வேண்டும். அவர்கள் உங்களின் பொருளாதாரத்தை பொறுத்து, பின் தகுதியுடைய விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டையையும், வங்கி பாஸ் புத்தகத்தையும் வழங்குவார்கள். இதில் கிசான் அட்டை வாங்கியவரின் பெயர், முகவரி, வைத்திருக்கும் நிலம் பற்றிய விபரம், பணம் பெறும் வரம்பு, செல்லுபடியாகும் காலம், பாஸ் போர்ட் அளவு புகைப்படம் போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இந்த கணக்கின் மூலம் கடன் வழங்கப்படும்.

கிசான் கடன் அட்டை நன்மைகள்:

  1. பிணையம் ஏதுமின்றி ரூபாய் 1.60 லட்சம் வரை கடனுதவி பெறலாம்.
  2. ரூபாய் 3 லட்சம் வரை பயிர்களுக்கும், ரூபாய் 2 லட்சம் வரை கால்நடை பராமரிப்பிற்கும் கடன் வழங்கப்படுகிறது.

வட்டி விகிதம்:

  • 7 சதவீத வட்டியில் கிடைக்கும்.
  • ஒரு வருடத்திற்குள் திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத சலுகையுடன் 4 சதவீத வட்டியில் கிடைக்கும்.

மேலும் படிக்க: அக்ரி-கிளினிக்குகள் மற்றும் விவசாய வணிக மையம் நிறுவ அரசு உதவி எவ்வாறு பெறலாம்? அறிக

தேவையான ஆவணங்கள்:

  • சிட்டா
  • ஆதார் அட்டை நகல்
  • வங்கி கணக்கு நகல்
  • புகைப்படம்

எந்த எந்த வங்கிகள் கிசான் கடன் அட்டையை வழங்குகின்றன?

நபார்டு (NABARD), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank), பேங்க் ஆப் இந்தியா (Bank of India), எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) மற்றும் ஐ.டி.பி.ஐ (IDBI) ஆகிய வங்கிகள் கிசான் கடன் அட்டையை வழங்குகின்றன.

எனவே, இந்த கிசான் கடன் அட்டை மூலம் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்க இன்டென்டாக கடன் பெற, இந்த அட்டை பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

மேலும் படிக்க:

சுமார் 8 பிரிவுகளில், 153 மத்திய வேலைவாய்ப்பு: இதோ முழு விவரம்! Apply Now

விவசாயிகள் விபத்தில் இறந்தால் ரூ.1 லட்சம் வரை இழப்பீடு- என்ன திட்டம்?

English Summary: How to get Kisan card? know its interest rate: Updated info Published on: 02 September 2023, 04:38 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.