விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய அரசு உழவர் பாதுகாப்பு கடன் அட்டை வழங்க உள்ளது. இதன் மூலம் பயிர் சாகுபடி செய்வதற்கும், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பிற்கும் தேவையான கடன் வழங்க உள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாயி நபர் ஜாமீன் அடிப்படையில் ரூ.1.60 லட்சம் வரையும், நில ஈட்டுறுதி அடிப்படையில் ரூ.3 லட்சம் வரையும் பயிர்க்கடனாக பெற்றுக் கொள்ளலாம்.
விவசாய கடன் பெற விரும்புவோர்களுக்கு 7% (58-பைசா) வட்டியுடன் கடன் வழங்கப்படும். 5 ஆண்டுக்களுக்குள் கடனை செலுத்த திரும்ப செலுத்த வேண்டும். உரிய காலத்திற்குள் கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் 3% சதவீத வட்டித்தொகை (24-பைசா) மானியமாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
உழவர் கடன் அட்டை சிறப்புகள்
- விவசாய கடன் அட்டை (கிசான் கிரிடிட் கார்டு) திட்டம், அனைத்து வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருவதால் விவசாயிகள் அருகிலுள்ள வங்கிகளை அணுகி தங்களை இணைத்து கொள்ளலாம்.
- பிரதம மந்திரி சம்மன் நிதி திட்டத்தில் பயன் பெற்று வரும் விவசாயிகளும், விவசாயக் கடன் அட்டை பெற்றுக்கொள்ளலாம். இதுவரை பெறாதவர்கள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அல்லது சேமிப்பு கணக்கு உள்ள வங்கிகளை நேரடியாக தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விவசாய கடன் அட்டையினை பெற்றுக் கொள்ளலாம்.
- செயல்படாத உழவர் கடன் அட்டை உள்ள விவசாயிகள் வங்கிக் கிளையை அணுகி புதிய கடன் அட்டை அல்லது பழைய அட்டையை செயல்படுத்த விண்ணப்பிக்கலாம். மேலும் கடன் வரம்பிணை அதிகரிக்க அனுமதி கோரலாம்.
- உழவர் கடன் அட்டைதாரர்கள் இதுவரை கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கான கடன் தொகையை வரம்பில் இணைக்க வங்கிக் கிளையை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதிதாக உழவர் கடன் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள், தங்களது ஆதார் அட்டை, நில உரிமை ஆதாரம் (கம்ப்யூட்டர் சிட்டா), வங்கி சேமிப்புகணக்கு, புதிய கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் போன்ற ஆவணங்களுடன் வங்கிக் கிளையை அணுகி 2 வார காலத்திற்குள் பெற்று கொள்ளலாம்.
Share your comments