1. விவசாய தகவல்கள்

தென்னைக்குக் காப்பீடு செய்வது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
How to Insure Coconut?

இயற்கை இடர்பாடுகளில் இருந்து தென்னை மரங்களைப் பாதுகாத்துக் கொள்ள காப்பீடு என்பதுப் பெரிதும் கைகொடுக்கும். எனவே காப்பீடு செய்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமான ஒன்று.

தமிழகத்தில் 15லட்சம் தென்னை மரங்கள் சாகுபடி செய்யபட்டு வருகின்றன. புயல்,வெள்ளம், வறட்சி,இடி மின்னல் மற்றும் தொடர் கனமழையினால் பாதிக்கப்படும் சூழலில், மரங்களுக்கு காப்பீடு செய்து இடர்பாடுகளினால் எற்படும் நஷ்டத்தைத் தவிர்க்கவும், அதில் இருந்துத் தப்பிக்கவும் விவசாயிகளுக்கு வாய்ப்பு உள்ளது. அதுதான் தென்னைக்கானக் காப்பீடு.

இத்திட்டத்தின் கீழ் குட்டை மற்றும் ஒட்டுரக 4ஆம்ஆண்டு முதல் நெட்டை மரங்களுக்கு 7ஆம் ஆண்டு முதல் 60ஆண்டு வரை காப்பீடு செய்யலாம்.
ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில்175,மரங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்ய முடியும். மரங்களில் வரிசைஎண் பெயிண்டிங் செய்து இருக்க வேண்டும்.

காப்பீட்டுக் கட்டணம்

4 முதல் 15,வருட வயதுடைய மரங்களுக்கு தலா 2.50 பிரிமியமாக வசூலிக்க படுகிறது. இதற்கானக் காப்பீட்டுத் தொகை மரம் ஒன்றுக்கு ரூ.900 மட்டுமே.
தென்னை சாகுபடி மற்றும் உற்பத்திதிறனில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
2.10 மில்லியன் எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இவற்றை கண்காணித்து சாகுபடி மற்றும் இதர தென்னை சம்மந்தப்பட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க 12.01.1981ஆம் ஆண்டில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட சட்ட பூர்வமான அமைப்பு தான் தென்னை வளர்ச்சி வாரியம்( coconut development board). இதன் தலைமை இடம் கேரளாவில் உள்ள கொச்சியாகும். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இதன்
கிளை நிலையம் உள்ளது.

செயல்பாடுகள்

  • தென்னை சாகுபடிமற்றும் தொழில் நுட்ப ஆலோசனை வழங்குதல்

  • சாகுபடி பரப்பை அதிகப்படுத்திட நிதி மற்றும் அதனைச்சார்ந்த உதவிகள் வழங்குதல்

  • தேங்காய் மற்றும் அதன் பொருட்களை பதப்படுத்த நவீன தொழில் நுட்பங்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்தல்

  • தேங்காய் விலை மற்றும் விற்பனை சந்தை வாய்ப்பு குறித்து நடவடிக்கை மேற்கொள்ளல்

  • தர நிர்ணய யுத்தம்

  • பயிற்சி மற்றும் நிலைய பயிற்சி வழங்குதல்

  • மறுநடவு மற்றும் புத்துயிர் ஊட்டல்

தகவல் மற்றும் பயிற்சி நிலையம் கேரளாவில் உள்ள வாழைக்குளத்தில் அதைந்துள்ளது. இங்கு தென்னை சம்மந்தப்பட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
94435 70289

மேலும் படிக்க...

எல்லாக் கொரோனா வைரஸையும் தடுக்கும் ஒரேத் தடுப்பூசி!

தாமதமாக வந்த ஆசிரியர்கள் - தடாலடியாகக் கட்டாய விடுப்பு கொடுத்த CEO!

English Summary: How to Insure Coconut? Published on: 08 February 2022, 11:37 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.