தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தூத்துக்குடியில் நடத்தப்பட்ட பயறு வகைப் பயிர்களில் தரமான விதை உற்பத்திக்கான தொழில்நுட்பப் பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பயிர் இனப் பெருக்கம் மற்றும் மரபியல் பயறு வகைத்துறையில் செயல்பட்டு வரும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம், எட்டயபுரம் தாலுக்காவில் உள்ள சிந்தலக்கரை ஊராட்சியில் இந்த பயிற்சியை நடத்தியது.
நோக்கம் (Concept)
விவசாயிகளுக்கு பயறு வகைப்பயிர்களில் தரமான விதை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பப் பயிற்சியினை அளித்து, விதை மாற்று விகிதத்தை அதிகப்படுத்துவதே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
லாபம் ஈட்ட யோசனை (The idea of making a profit)
இதில் விதை மைய இயக்குநர் முனைவர். செ. சுந்தரேஸ்வரர் பங்கேற்று, தரமான விதை உற்பத்தியின் மூலம், விவசாயிகள் லாபம் ஈட்டும் முறையையும், விதை உற்பத்தியின் மூலம் தானிய உற்பத்தியைக் காட்டிலும் லாபம் ஈட்டுவது குறித்தும் விளக்கினார்.
மேலும் பயறு வகை விதை உற்பத்தியில் இனத் தூய்மைப் பராமரிப்பின் முக்கியத்துவம் மற்றும் பராமரிப்பு வழிமுறைகள், தரமான விதைகளின் முக்கியத்துவம் மற்றும் பயறு வகைப் பயிர்களின் விதி நேர்த்தி, பயறு வகைப் பயர்களில் மேற்கொள்ள வேண்டிய உழவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றியும் வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.
மேலும் படிக்க...
உணவுப்பொருட்களில் கலப்படத்தைக் கண்டறிவது எப்படி? எளிய டிப்ஸ்!
Share your comments