மாசிப்பட்டத்தில் சாகுபடி செய்யும் போது பங்குனி, சித்திரை வெயில் அதிகமாக இருப்பதால் செடி வளர்ச்சி குன்றிவிடும். நீர்த்தேவை அதிகம் இருக்கும். தக்காளி பழங்கள் வெம்பி கெட்டு விடும்.
பசுமை குடில் (Green House)
பசுமை குடில் அமைக்கலாம். அல்லது நிழல் தரும் அகத்தி மரத்தை வரப்போரத்திலும் பாத்தி வரப்புகளில் சூரிய திசைக்கு எதிராக நடவு செய்தால் வெயில் தாக்கத்தை குறைக்கலாம். அதன்பின் காய்கறி நடவு செய்தால் வெப்பத்தில் இருந்து காய்கறிகளை பாதுகாத்து மகசூல் அதிகரிக்கலாம்.
பரிந்துரைக்கப்பட்ட உரத்தில் பாதியளவு பயன்படுத்தினால் போதும். பயிர்கள் வாடாமலும் சாறு உறிஞ்சும் பூச்சிகள், காய்ப்புழு தாக்குதல் இல்லாமல் கட்டுப்படுத்தலாம். கத்தரியில் காய்ப்புழு தாக்குதலுக்கு உள்ளான நுனிப்பகுதி, காய்களை வயலுக்கு வெளியே தீயிட்டு எரிக்கவேண்டும். இதன் மூலம் புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
வெண்டை, கத்தரி, தக்காளி பயிர்களில் காய்ப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகளால் ஏற்படும் சேதத்தை குறைக்க வேம்பு, நொச்சி இலைக்கரைசல், வேப்பங்கொட்டை சாறு தெளிக்கலாம். இதன் மூலம் பூச்சிமருந்து செலவும் குறையும்.
- மகாலட்சுமி, விதைப்பரிசோதனை அலுவலர்
ராமசாமி, சாய்லட்சுமி, சரண்யா
வேளாண் அலுவலர்கள் விதைப்பரிசோதனை நிலையம்
விருதுநகர்
மேலும் படிக்க
கோடையின் வரப்பிரசாதம் வெள்ளரிக்காய்: சத்துக்களும், பயன்களும்!
Share your comments