பந்தலுாரில் வறட்சியான பகுதியில் நன்றாக விளையக்கூடிய ஈச்சம்பழம் விளைந்துள்ளது. இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை பூர்வீகமாக கொண்ட, ஈச்சம் மரம் வறட்சியான பகுதிகளில் வளரும் தன்மை கொண்டது.
ஈச்சம் பழம் (Icham Fruit)
ஈச்ச மரம் அல்லது ஈச்சை மரம் என்பது பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஒரு பனைக் குடும்பத் தாவரமாகும். இவை பெரும்பாலும் தெற்கு பாக்கித்தான், இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், மியான்மர், வங்கதேசம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
எலும்பு தேய்மானம், கண்பார்வை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை நீக்கும் தன்மை கொண்டது ஈச்சம் பழம். இந்த பழம் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் விளைந்துள்ளது. ஒன்றரை கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
ஓய்வு பெற்ற வனச்சரகர் கணேசன் கூறுகையில், ''வறட்சியான பகுதிகளில் விளையும், ஈச்சம் பழங்கள் இந்த பகுதியில் விளைவது, காலநிலை மாற்றத்தையே காட்டுகிறது. ஈச்சம் பழ விளைச்சல் நன்றாக இருக்க வேண்டுமானால் வெப்பம் அதிகமாக இருக்க வேண்டும்,'' என்றார்.
மேலும் படிக்க
261 கோடி மரக்கன்று நடுவதற்கு திட்டம்: வனத்துறை அமைச்சர் அறிவிப்பு!
குறுவைத் தொகுப்புத் திட்டம்: புறக்கணிக்கப்படுவதாக நாகை மாவட்ட விவசாயிகள் புலம்பல்!
Share your comments