ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிக்கு தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் சார்பில் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது. இதனைப் பெற விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அமெரிக்கா போன்ற நாடுகளில், இந்திய விளை பொருட்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விவசாயியா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு உறுதி. இந்தப் பரிசை தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் அளிக்கிறது.
தகுதி
வேளாண், தோட்டக்கலை பயிர்கள் எதுவாக இருந்தாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணம் ரூ.100. விண்ணப்பத்தை மாவட்ட கண்காணிப்பு குழு கமிட்டி பரிந்துரை செய்து மாநில கமிட்டிக்கு அனுப்பும். எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு எடையில் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது, அதன் மதிப்பு உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.
தொடர்புக்கு
தேர்ந்தெடுக்கப்படும் விவசாயிக்கு ஏற்றுமதியாளர் விருதும் ரூ.2 லட்சம் பரிசும் வழங்கப்படும் என விற்பனை வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர். கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த வட்டார வேளாண், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
Share your comments