எண்ணெய்வித்து மரப்பயிர்கள் வளர்க்க மானியம் கொடுக்கப்படும் என தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் அறிவித்துள்ளது. அறிவிப்போடு மட்டும் நின்றுவிடாமல், இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய முன்வருமாறு விவசாயிகளுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் முனைப்புடன், வேளாண்மை உழவர் நலத்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் எண்ணெய்வித்து மரப்பயிர்கள் திட்டத்தின் மூலம், விவசாயிகளின் நிலங்களில் மரம் நடவு செய்ய மானிய உதவி வழங்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட தேசிய உணவு பாதுகாப்புத் திட்ட ஆலோசகர் வயல் ஆய்வு செய்து தெரிவித்ததாவது:-
எண்ணெய்வித்து மரப்பயிர்கள் சாகுபடி விவசாயிகளின் தரிசாக உள்ள நிலங்களில் எண்ணெய்வித்து, மரப் பயிர்களான வேம்பு மற்றும் புங்கன் நடவு செய்ய மானிய உதவி தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் மானியம் வழங்கப்படும்.
ரூ.20 ஆயிரம் மானியம்
அந்த வகையில், வேம்பு பயிருக்கு எக்டருக்கு ரூ.17ஆயிரம் புங்கன் பயிருக்கு எக்டருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப் படுகிறது. மேலும் நடவு செய்த முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஊடுபயிரிடுதல் மற்றும் பராமரிப்பு மானியமாக ரூ.3ஆயிரம் வழங்கப்படுகிறது என தெரிவித்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
காங்கேயம் வட்டாரம் கீரணூர் கிராமத்தில் விவசாயிகள் நடவு செய்துள்ள வேம்பு எண்ணெய்வித்து மரப்பயிர் கன்றுகளை தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன், காங்கேயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ரவி, தொழில்நுட்ப உதவியாளர் கிருத்திகா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் படிக்க...
Share your comments