PM Kisan திட்டத்தின் பயனாளிகளில் ஒரு லட்சம் பேருக்கு இம்முறை 12வது தவணை வழங்கப்படமாட்டாது என்பது தெரியவந்துள்ளது. அதிகாரிகள் வெளியிட்டுள்ள இந்தத் தகவல், விவசாயிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளனர்.
ரூ.6,000
பொருளதார ரீதியில் நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவும் வகையில், ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம், 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
12ஆவது தவணை
அந்த வகையில், பிரதமரின் கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 12ஆவது தவணையை விரைவில் விடுவிக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் வங்கிக் கணக்கில் ஆதார் எண் சமர்பித்து பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மட்டும்தான் வழங்கப்பட உள்ளது. அவ்வாறு ஆதார் எண் சமர்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் மட்டும் பணம் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. இது எதிர்க்கட்சிகளால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
1 லட்சம் விவசாயிகள்
இந்த முறை ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் விவசாயிகளுக்கு 12வது தவணைத் தொகை செலுத்தப்பட மாட்டாது என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் KYC விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாததாலேயே பணம் செலுத்தப்படுவது நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் இந்த தகவல், விவசாயிகளை விரக்தி அடையச் செய்துள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் KYC விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டுள்ள அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
மேலும் படிக்க...
Share your comments