ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், மறைமுக ஏலம் வாயிலாக நெல் மூட்டைகளை விற்பனை செய்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருவாரூர் விற்பனைக் குழுச் செயலாளர் மா.சரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :
திருவாரூர் மாவட்டத்தில், சம்பா தாளடி நெல் பயிர்கள் நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடைப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
மறைமுக ஏலம் (Indirect auction)
இந்த நேரத்தில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு வந்து மறைமுக ஏலம் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம்.
திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் குடவாசல் மற்றும் பூந்தோட்டம் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் கிட்டங்கி வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன.
பணம் பட்டுவாடா (Money)
இங்கு விளைபொருள்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு, உடனடியாக வங்கிகள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.
விற்பனை (Sale)
மேலும் விவசாயிகள், இந்த விற்பனை கூடங்களில் தங்களின் விளைபொருள்களை இடைத்தரகர் மற்றும் எவ்வித கட்டணமுமின்றி நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன் பெறலாம்.
கடன் (Credit)
தங்கள் விளைபொருளை குவிண்டாலுக்கு ஒரு நாளைக்கு ஐந்து காசுகள் என்ற குறைவான வாடகைக்கும், பொருளின் மதிப்பில் 50 சதவீதத் தொகையை 5 சதவீத வட்டிக்கு அதிகபட்சமாக 180 நாள்களுக்கு இருப்பு வைத்து, ரூ.3 லட்சம் வரை பொருளீட்டு கடனாகப் பெற்று, விலை ஏற்றத்தின்போது விற்பனை செய்து பயன்பெறலாம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் படிக்க...
முள்ளங்கி சாகுபடியில் கூடுதல் வருமானம் ஈட்ட சிம்பிள் டிப்ஸ்!
Share your comments