விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, பொருளாதார ரீதியில் அவர்களுக்கு உதவும் விதமாக 3 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்க மாநில அரசு முன்வந்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு ஒருபுறம், அடித்துத் தாக்கும் கனமழை மறுபுறம் என எல்லா வகையிலும், பெரும் நிதிச்சுமையை விவசாயிகள் எதிர்கொண்டுவருகின்றனர்.
எனவே விவசாயிகளுக்கு உதவும் வகையில், 0 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்க சட்டீஸ்கர் மாநில அரசு முன்வந்துள்ளது. அதாவது இந்தக் கடன் பெறும் விவசாயிகளுக்கு வட்டி கிடையாது. இது தொடர்பாக நடைபெற்ற சட்டீஸ்கர் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அம்மாநில வேளாண்துறை அமைச்சர் ரவீந்திர சவுபே தெரிவித்துள்ளார்.
யாருக்குக் கிடைக்கும்
இதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள வேளாண் திட்டங்களில், சிறு மற்றும் விவசாயிகளுக்கு இந்தக் கடனைப் பெறத் தகுதியானவர்கள் ஆவர்.
தகுதி
குறிப்பாக கால்நடை வளர்ப்பு, மீன் பண்ணை அமைத்தல், தோட்டக்கலைப் பயிர் சாகுபடி போன்றவற்றில்,உள்ள விவசாயிகளுக்கு குறுகிய கால கடனாக இந்த 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக, வட்டி மானியம் வழங்கப்படும் திட்டங்களில் விதிகள் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேளாண் சார்ந்த துறைகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் வகையில், நவ ராய்பூரில், 3 ஏக்கர் நிலப்பரப்பில், கிருஷி பவன் அமைக்கவும் சட்டீஸ்கர் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் படிக்க...
Share your comments