1. விவசாய தகவல்கள்

உளுந்து சாகுபடிக்கு உதவ 100% மானியத்தில் பாசனநீர்கருவி !

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Irrigation equipment

உளுந்து சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசனக்கருவி மானியமாக வழங்கப்படும் என வேளாண்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. சித்திரைப்பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்வது விவசாயிகளுக்கு கூடுதல் மகசூலையும், அதற்கு ஏற்ப நல்ல வருமானத்தையும் கொடுக்கும். இதனைக் கருத்தில்கொண்டு, உளுந்து சாகுபடிக்கு உதவும் வகையில், தெளிப்பு நீர் பாசனக்கருவி மானியமாக வழங்கப்படும் என வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கூறினர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டமானது உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நீர் நுட்ப மையம் வழிகாட்டுதலின்படி இந்தத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேளாண் விஞ்ஞானிகளான வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், நீர்வள, நிலவள திட்ட விஞ்ஞானி செல்வமுருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உளுந்து சாகுபடி

சித்திரை பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்ய 100 சதவீத மானியத்தில் உளுந்துடன் தெளிப்பு நீர் பாசனக்கருவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் விதைகள், உரங்கள், இனக்கவர்ச்சி பொறி, மஞ்சள் வண்ண ஒட்டு பொறி மற்றும் நடமாடும் நீர்த் தெளிப்பான் ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

தகுதி

  • விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 2.5 ஏக்கர் முதல் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை சொந்தமாக நிலம் வைத்திருக்க வேண்டும்.

  • இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்

  • ஆதார் கார்டு நகல்

  • குடும்ப அட்டை நகல்

  • சிட்டா அடங்கல் அசல்

  • நில வரைபடம்

  • சிறு குறு விவசாயி சான்றிதழ்

  • 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

 

மேலேக் கூறியவற்றை இணைத்து இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் அடுத்த மாதம் (மார்ச்) மாதம் 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நீடாமங்கலம்-மன்னார்குடி

இதில் திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்த நீடாமங்கலம், மன்னார்குடி, நன்னிலம், குடவாசல் மற்றும் முத்துப்பேட்டை வட்டார விவசாயிகள் பயன்பெறலாம்.


மன்னார்குடி வட்டாரத்தில் செருமங்கலம், காரிகோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, ஆலங்கோட்டை, மூவாநல்லூர், துளசேந்திரபுரம், நீடாமங்கலம் வட்டாரத்தில் வடுவூர் புதுக்கோட்டை, வட பாதி, தென்பாதி, அக்ரஹாரம், சாத்தனூர், எடமேலையூர், கீழப்பட்டு, அய்யம்பேட்டை, சோனாபேட்டை, எடஅன்னவாசல், கட்டக்குடி, கொத்தங்குடி, காளாச்சேரி, காரக்கோட்டை, ராணிதோப்பு, புளியங்குடி, நெம்மேலி, பருத்திகோட்டை, தளிக்கோட்டை, சமயன்குடிகாடு, ஓவேல்குடி  ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க...

மனைவியைக் கொன்றுக் கூறுபோட்டு சமைத்துத் தின்றக் கணவன்!

கன்றுக்குட்டியைக் கற்பளித்த இளைஞர்கள்- உச்சக்கட்ட காமவெறி!

English Summary: Irrigation equipment at 100% subsidy to help in black gram cultivation! Published on: 19 February 2022, 10:52 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.