ஆப்பிள், பொதுவாக குளிர் பிரதேசங்களில் காய்க்கும் பழம் என கருதப்படுகிறது. ஆனால் இப்போது நிலைமை மாறுகிறது, ஏனென்றால் இப்போது விஞ்ஞானிகள் மற்ற பகுதிகளிலும் ஆப்பிள் சாகுபடியை சாத்தியமாக்கியுள்ளனர். ஆம், ஆப்பிள் மரங்களை இப்போது மற்ற காலநிலைகளிலும் நடலாம். இந்தியாவில் ஆப்பிள் மரங்கள் டெல்லி, சண்டிகர் போன்ற இடங்களில் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, பீகார் போன்ற வெப்ப மண்டல பகுதிகளிலும் வளர்ந்து வருகின்றன.
ஆப்பிள் விளைச்சலுக்கு தேவையானவை (Needs for apple yield)
5-6 pH வரம்பில் 45 செ.மீ ஆழத்தில் நன்கு காய்ந்த பசளை மண்ணில் அதாவது (Loamy soil)-இல், ஆப்பிள்கள் சிறப்பாக வளரும். ஆப்பிள் சாகுபடிக்கான மண் கடினமான அடி மூலக்கூறு மற்றும் நீர்-தடுப்பு நிலைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
இந்தியாவில் ஆப்பிள் வரலாறு (Apple History in India)
விவசாயிகள் தங்கள் தொழில்நுட்பத்தை மிகவும் கச்சிதமாக மேம்படுத்தியுள்ளனர், இப்போது ஒரே மரத்தில் ஒரு வருடத்தில் இரண்டு பயிர்களைப் பெறுகிறார்கள். முழு இமாச்சல பிரதேசம் மட்டுமின்றி பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளிலும் இப்போது ஆப்பிள் சாகுபடியை வெற்றிகரமாக செய்ய முடிகிறது. இந்த பகுதிகளில் இருந்து வரும் ஆப்பிள்கள் ஒரு மாதத்திற்கு முன்பே பழுக்க ஆரம்பிக்கின்றன, எனவே அவை ஜுன் மாதத்தில் நல்ல விலையில் விற்கப்படுகின்றன.
'குளிர்காலம் இல்லாத' மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸுக்குக் குறையாத வெப்பமண்டல காலநிலைகளிலும் ஆப்பிள்களை பயிரிடலாம். அந்த வகையில், ஹர்ரிமன் அல்லது HRMN 99 ஆப்பிள் வகையை இந்தியா முழுவதும் வளர்க்கலாம்.
ஆப்பிள் வகைகள் (Apple Varieties)
ஹர்ரிமன் அல்லது எச்ஆர்எம்என் 99 (Harriman or HRMN 99): ஹிமாச்சல் பிரதேசத்தின் ஆப்பிள் வகையாகும்.
இதை 10 ஆண்டுகளுக்கு முன்பு பிலாஸ்பூரைச் சேர்ந்த ஹர்ரிமன் சர்மா என்ற விவசாயி கண்டுபிடித்தார். சர்மா இந்த நாற்றில் இருந்து சில செடிகளை, தனது வயலில் நட்டார். பின்னர், படி படியாக, இந்த நாற்றின் சாகுபடியை பார்த்து, பலர் நட தொடங்கினர், இவ்வாறு இந்த நாற்று இமாச்சலம் முழுவதும் வளர்ந்தது. எனவே, சர்மா இந்த வகையான தாவரங்களை வணிக அளவில் இனப்பெருக்கம் செய்து விநியோகிக்கத் தொடங்கினார்.
இப்போது, இந்தியா முழுவதும் HRMN 99 இன் 5 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமின்றி நேபாளம், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த ஆப்பிளின் மரக்கன்றுகள் சென்றடைந்துள்ளன. HRMN 99 இன் பழங்கள் பச்சை அல்லது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஜூன் நடுப்பகுதியில் அவை பழுக்க தொடங்கும் என்பது குறிப்பிடதக்கது.
அன்னா என்னும் ஆப்பிள் வகை: இந்த ஆப்பிள் வகை 1950 ஆம் ஆண்டு அப்பா ஸ்டீன், அவரால் இஜரையில் அன்.ஷேமர் கிப்புட்ஸில் வளர்க்கப்பட்டது. இந்த ஆப்பிள் வகைக்கு 300 மணிநேர குளிர்ச்சியே தேவைப்படுகிறது, எனவே இமாச்சலப் பிரதேசம் முழுவதும் இந்த வகை வளர்க்கலாம். அன்னா வகை ஆப்பிள் பழம் சுவைக்கவும் ஆற்புதமாக இருக்கும்.
டோர்செட் கோல்டன், இதுவும் ஒரு ஆப்பிள் வகை: இந்த ஆப்பிளை ஐரீன் டோர்செட் தனது தோட்டத்தின் பொன்னிற சுவையான மரங்களின் நடுவில் கண்டார். ஆகவேதான், அதற்கு டோர்செட் கோல்டன் என்று பெயரிட்டார்.
இதற்கு 150 மணிநேரம் குளிர் மட்டுமே தேவைப்படுகிறது, இதனால் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் வளர முடியும். டோர்செட் கோல்டனும், கோல்டன் டீலிசியஸ் போல தோற்றமளிக்கிறது மற்றும் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகி வருகிறது. 2022-இல் புதிதாக தொழில் தொடங்க அதாவது (NEW BUSINESS IDEA)-வாக, இதை எடுத்துக்கொள்ளலாம், நீங்கள் இருக்கும் இடம் குளிர் பிரதேசமாக இல்லாவிட்டாலும், இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
அரசு உதவிக்கு பின்னும், கால்நடையில் வளர்ச்சி இல்லை. ஏன்?
MPKSY: முற்போக்கு விவசாயிகளை கவுரவித்து ரூ.60 லட்சம் மதிப்பில்லான விருது!
Share your comments