வேளாண் பயிர் கடன் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வாங்கியக்கடனை முன்கூட்டியே செலுத்திய விவசாயிகள், தங்களுக்கு ஏதேனும் சலுகை கிடைக்குமா? என ஏக்கத்தில் உள்ளனர்.
கடன் வழங்கும் முறை (Lending method)
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர் கடன், நகை கடன் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 1 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக, 50 ஆயிரம் ரூபாய் வரை பயிர் கடன் வழங்கப்படும்.
தகுந்த ஆவணங்களுடன் விவசாயிகள் விண்ணப்பித்தால், சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.
வங்கிக்கணக்கில் வரவு (Credit to bank account)
அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து கையெழுத்திட்டவுடன், மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து, விவசாயிகளின் வங்கி கணக்குக்கு பணம் வந்துவிடும்.
அதிகாரிகள் கோரிக்கை (request of the authorities)
பயிர் கடனை, ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவித்து விட்டால், முடிந்த கடனை புதுப்பிக்க முடியாது என்பதால், முன்கூட்டியே புதுப்பிக்கும்படி சங்க அதிகாரிகள், விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டனர்.
வேறு இடங்களில் கடன் (Credit elsewhere)
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள், வேறு இடங்களில் கடன் பெற்று, பயிர் கடனை திருப்பி செலுத்தியுள்ளனர். இதில், பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் கடன் வழங்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விவசாயிகள் ஏக்கம் (Farmers nostalgia)
இந்நிலையில், பயிர் கடனை ரத்து செய்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5ம் தேதி, உத்தரவிட்டார். இதனால், முன்கூட்டியே பயிர் கடனை புதுப்பித்த விவசாயிகள், தள்ளுபடி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில், கூட்டுறவு வங்கிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு வருகின்றனர்.
விவசாய சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், தள்ளுபடி அறிவிப்பு வந்ததால், கடனை முன்கூட்டியே செலுத்தியவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே, முதல்வர் குறிப்பிட்ட நாட்களில் திருப்பி செலுத்திய விவசாயிகளையும் பயனாளர்களாக அறிவித்து, அவர்களுடைய பணத்தை திருப்பி தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...
காங்கயத்தில் நாளை கால்நடைத் திருவிழா!
பம்ப் செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு!
மெட்ரோ ரயிலில் ஓசியில் பயணம் செய்ய விருப்பமா? இன்று மட்டும் வாய்ப்பு!
Share your comments