1. விவசாய தகவல்கள்

ஈஷா சார்பில் 2 புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடக்கம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Isha launches 2 new farmer producer companies!

ஈஷா அவுட்ரீச் சார்பில் கோவை மாவட்டத்தில் புதிதாக 2 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

பொள்ளாச்சி ரோட்டரி ஹாலில் நடைபெற்ற தொடக்க விழாவில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சண்முக சுந்தரம் பங்கேற்று இந்நிறுவனங்களை தொடங்கி வைத்தார்.

300 விவசாயிகள் (300 farmers)

விழாவில் அவர் பேசியதாவது: ஈஷா அவுட்ரீச் அமைப்பும், மத்திய வேளாண் துறையின் கீழ் இயங்கும் சிறு, குறு விவசாயிகள் கூட்டமைப்பும் (Small Farmers Agri Consortium - SFAC) இணைந்து ஆனைமலையில் அருள்மிகு சோமேஸ்வரர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தையும், கிணத்துக்கடவில் ஸ்ரீ வேலாயுதசாமி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தையும் தொடங்கி இருக்கின்றன. இந்த 2 நிறுவனங்களிலும் தலா 300 விவசாயிகள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

முன்னோடி (Pioneer)

விவசாயிகள் அதிகம் இருக்க கூடிய கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஈஷாவின் வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் முன்னோடியாக இருந்துள்ளது

மிகக் குறைந்த நிலங்களை வைத்து கொண்டு விவசாயிகள் தனி தனியாக விவசாயம் செய்து லாபம் ஈட்டுவது மிகவும் சிரமம். அதற்கு பதிலாக ஆயிரம் விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை தொடங்கி தங்கள் பொருட்களை விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும். அத்துடன், தங்கள் பொருட்களை வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்.

ரூ.10,000 கோடியாக (Rs 10,000 crore)

2019-ம் ஆண்டு உலக சந்தையில் டி.ஏ.பி உரம் டன் ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. ஆனால், தற்போது ஒரு டன் டி.ஏ.பி உரம் 1.20 லட்சமாக பன்மடங்கு விலை உயர்ந்துள்ளது. இதனால், மத்திய, மாநில அரசுகள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. மத்திய அரசு கடந்த நிதியாண்டில் இயற்கை விவசாய மேம்பாட்டிற்காக ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. வரும் நிதியாண்டில் இது ரூ.10 ஆயிரம் கோடியாக உயர வாய்ப்புள்ளது. ஆகவே, விவசாயிகள் ரசாயன விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாற முன் வர வேண்டும்.
இவ்வாறு பொள்ளாச்சி எம்.பி. பேசினார்.

2 பெரிய சவால்கள் (2 big challenges)

ஈஷா விவசாய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் திட்ட விளக்க உரை ஆற்றுகையில், “விளைப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதும், விளைவித்த பொருட்களுக்கு லாபகரமான விலை பெறுவதும் தான் விவசாயிகளுக்கு இருக்கும் இரண்டு பெரிய சவால்கள். இந்த இரண்டிற்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தீர்வு அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

ஆன்லைனில் மாடித் தோட்டத்திற்கான விதைகள் மற்றும் செடிகள் மானிய விலையில்!

மீண்டும் ரூ.100யை எட்டும் தக்காளி - தவிக்கும் இல்லத்தரசிகள்!

English Summary: Isha launches 2 new farmer producer companies! Published on: 28 December 2021, 11:06 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.