பருவநிலை மாற்றத்தைத் தாங்கக் கூடிய, லாபகரமான, நீடித்த பயன்தரக் கூடிய விவசாய முறைகளை உருவாக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் எம். வெங்கய்யா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
பட்டமளிப்பு விழா (Convocation)
கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 41வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களை பல்கலைக்கழகத் துணை வேந்தர் நீ.குமார் வரவேற்றார்.
இவ்விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் எம்.வெங்கைய்யா நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, பருவநிலை மாறுதலை தாக்குபிடிக்கக் கூடிய பயிர் ரகங்களை உருவாக்க வேண்டும். அவை வறட்சி, வெள்ளம், வெப்பம், உப்புத்தன்மை, பூச்சிகள், நோய்களைத் தாங்கும் வகையில் இருக்க வேண்டும்.
பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைப்பு செய்து கொள்ளும் பயிர்களை உருவாக்கினால் தான், இந்திய வேளாண்மையின் தாக்குபிடிக்கும் திறன் அதிகரித்து, நீடித்த வளர்ச்சி பெறுவதாக இருக்கும். வேளாண்மை மற்றும் உணவு துறையில் பருவநிலை மாறுதலால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் அதிகம். எனவே சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சூழலைக் குறைக்கும் வகையிலான தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
வேளாண்மைத் துறை முக்கியமானது மட்டுமின்றி, புனிதமானதாகவும் கருதப்படுகிறது. கிராமியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், நமது கலாச்சாரம், நாகரிகத்தில் பிணைந்த அம்சமாக விவசாயம் இருக்கிறது.
கூடுதல் விலை (Attractive Price)
நமது மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாழ்வாதாரத்துக்கு இன்னும் விவசாயத்தை தான் சார்ந்திருக்கிறார்கள். எனவே விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க, நாம் உற்பத்தியைப் பெருக்கவும், வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தவும், சாகுபடி எண்ணிக்கையை அதிகரிக்கவும், உயர் மதிப்பு பயிர்கள் சாகுபடி செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு லாபகரமான விலைக் கிடைப்பதை தொடர்புடைய துறையினர் உறுதி செய்யவது அவசியம்.
நல்ல சேமிப்பு மற்றும் பதப்படுத்தல் வசதிகளைச் செய்து தருதல், இடுபொருள்கள் கிடைக்கச் செய்தல், கடன் வசதி அளித்தல், சந்தைப்படுத்தலுக்கு நல்ல ஏற்பாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் தான் இது சாத்தியம்.
விவசாயிகளுக்கு பாராட்டு (Praise to the farmers)
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இணையற்ற, அர்ப்பணிப்பு உணர்வுடன் விவசாயிகள் செயல்பட்டனர். இதன் காரணமாக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விளைச்சல் பரப்பு 60 லட்சம் ஹெக்டர் அதிகரித்துள்ளது.
CRISPR-Cas9 மரபணு மாற்றுதல் போன்ற புதிய தொழில்நுட்பங்களையும், மேம்படுத்தப்பட்ட கருவிகளையும் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தி 30 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும், சாகுபடி செலவு 20 சதவீதம் வரை குறையும்''.
இவ்வாறு அவர் பேசினார்.
இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட 2942 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வேளாண்துறையைக் கூடுதலாகக் கவனித்துவரும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
மேலும் படிக்க...
மகசூலை 20% அதிகரிக்கும் திரவ உயிர் உரங்கள்!
மண்ணில்லா விவசாயத்திற்கான ஏரோபோநிக்ஸ்- 25% மானியம் தருகிறது அரசு!
அறுவடை பரிசோதனைக்கு, தற்காலிக பணியாளர்கள் நியமனம்- விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Share your comments