அடுத்த 24 மணி நேரத்திற்கு, தமிழகத்தின் தென், வடக்கு மன்றும் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வறண்ட வானிலை (Dry Weather)
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
அடுத்த 2 நாட்களுக்கு காலை நேரங்களில் வடதமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
வானிலை முன்னெச்சரிக்கை (Weather Forecast)
24.01.21 முதல் 27.01.21ம் தேதி வரை தமிழகம், புதுரை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிடையே நிலவும்.
சென்னை (chennai)
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேக மூட்டத்துடன் காணப்படும்.
காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவுமில்லை.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்
இதனிடையே நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
-
இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. இன்று முதல் 4 நாட்களுக்கு மணிக்கு 5 கி.மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீசும்.
வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். மேலும் காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.
கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் முட்டை அயற்சி மற்றும் வெள்ளை கழிச்சல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது, ஆய்வில் தெரியவந்து உள்ளது.
கிருமிநாசினி (Disinfectant)
எனவே பண்ணையாளர்கள் கோழிக்கு அளிக்கப்படும் குடிநீரில் ஈகோலை கிருமியின் தாக்கத்தை குறைக்க தகுந்த கிருமிநாசினியை உபயோகிக்க வேண்டும். மேலும் வெள்ளைக்கழிச்சல் நோயின் தாக்கத்தை குறைக்க தகுந்த இடைவெளியில் தடுப்பூசி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க...
இயற்கை விவசாயம் செய்ய 100 பேருக்கு ரூ.60 லட்சம் மானியம்!
நெல்லின் ஈரப்பதத்தை குறைக்க வந்துவிட்டது நவீன இயந்திரம்! தஞ்சையில் செயல்முறை விளக்கத்துடன் பரிசோதனை!
Share your comments