இயற்கைப் பொய்க்கும் காலங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளைத் தீர்க்க ஏதுவாக விவசாயக் கடன் அட்டை (KCC) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கடன் அட்டையை அனைவரும் பெறும் வகையில், வரும் மே 1ம் தேதி வரை சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த அருமையான வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
KCC எனப்படும் கிசான் கிரெடிட் கார்டு என்பது விவசாயிகளை கந்து வட்டிக்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்கவும், விவசாயத்திற்கு குறைந்த விலையில் கடன் கிடைக்கவும் தொடங்கப்பட்ட ஒரு சிறந்த திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் (KCC interest rate) கடன் வழங்கப்படுகிறது .
வட்டி (Interest)
கிசான் கிரெடிட் கார்டில் வாங்கப்படும் கடனுக்கு 7 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால், விவசாயி கடனை ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்தினால், 4 சதவீத வட்டி மட்டும் செலுத்தினால் போதும்.
பயிர் காப்பீடு (Crop insurance)
இது விவசாயிகளுக்கு மிக நல்ல திட்டமாகும். கிசான் கிரெடிட் கார்டு மூலம், விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்யலாம். ஏதாவது காரணத்தால், தங்களின் பயிர்கள் அழிந்துபோனால், அவர்கள் இதற்கான இழப்பீட்டைப் பெறலாம். வெள்ள காலத்தில், தண்ணீரில் மூழ்கிப் பயிர் நாசமானாலோ அல்லது வறட்சியின் போதும் பயிர் கருகிப்போனாலோ, கிசான் கிரெடிட் கார்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மே 1ம் தேதி வரை (Until May 1st)
இருப்பினும் பல விவசாயிகள் இந்தக் கடன் அட்டையை வாங்காமல் இருப்பதால், அவர்கள் பயன்பெறும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்ட பயனாளிகளுக்கு, விவசாய கடன் அட்டை வழங்குவதற்காக, இன்று முதவ் மே 1 வரை, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
மேலும், அனைத்து ஊராட்சிகளிலும், இன்று நடக்கும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில், பிரதமமந்திரியின் கவுரவ நிதி திட்டப் பயனாளிகளுக்கு, விவசாய கடன் அட்டை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சென்னை தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும், நடக்கும் இந்த சிறப்பு முகாம்களில், இதுவரை பெறாதவர்களுக்கும் விவசாய கடன் அட்டை வழங்கப்படும்.
இதன் வாயிலாக விவசாயம் செய்ய, 1.60 லட்சம் ரூபாய் வரை, பிணையமில்லா கடன் வழங்கப்படுகிறது. வேளாண் இடுபொருட்களான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை வாங்கவும், உற்பத்திக்கு தேவையான நிதியுதவி பெறவும் முடியும்.
மேலும் படிக்க...
கட்டிப்பிடி வைத்தியம்- உடல் ஆரோக்கியத்திற்கு அதிகப்பலன் தரும்!
வாட்டும் வெயிலிலும் உடலைக் குளுகுளுவென வைத்துக்கொள்ள வேண்டுமா?
Share your comments