சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, 2023-24 நிதியாண்டின் கிசான் கடன் அட்டை குறித்த தேசிய அளவிலான பிரச்சாரத்தை 2023 மே 3ஆம் தேதியன்று காலை 9:30 மணிக்கு மெய்நிகர் முறையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
கிசான் கடன் அட்டை (Kisan Card)
கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து சிறு நிலமற்ற விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டை வசதியை கொண்டு செல்ல இந்த நடவடிக்கை மேலும் உதவும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து தகுதியான கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை மற்றும் மீன்பிடி விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டையைக் கொண்டு செல்ல, கால்நடைத் துறை, பால்வளத் துறை, மீன்வளத் துறை மற்றும் நிதிச் சேவைத் துறை ஆகியவை இணைந்து, 2023 மே 1ஆம் தேதி முதல் 2024 மார்ச் 31ஆம் தேதி வரை “நாடு தழுவிய கிசான் கடன் அட்டை பிரச்சாரத்தை” மேற்கொண்டுள்ளன.
இந்த பிரச்சாரத்தை ஏற்பாடு செய்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை தெரிவிக்கும் சுற்றறிக்கை மார்ச் 13ஆம் தேதியன்று மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. வங்கிகள் மற்றும் மாநில அரசுகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம், நிதிச் சேவைத் துறையுடன் இணைந்து, தகுதியுள்ள அனைத்து கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டை வழங்க 2020 ஜூன் மாதம் முதல் பல்வேறு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்து வருகிறது.
இதன் விளைவாக, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி விவசாயிகளுக்கு 27 லட்சத்திற்கும் அதிகமான புதிய கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுச் சேவை மையங்களில் இருந்து சுமார் 1 லட்சம் விவசாயிகள் காணொலி வாயிலாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும் படிக்க
PM கிசான்: ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு பணம் கிடைக்கும் தெரியுமா?
கஞ்சா விவசாயத்தை சட்டப்படி அனுமதிக்க அரசு ஆலோசனை: காரணம் இதுதான்!
Share your comments