கோவை வேளாண்மைப் பல்கலைகழகம் 2020ல் வெளியிட்ட மணத்தக்காளி கோ.1 ரகம் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யக்கூடியது. ஜூன், ஜூலையில் விதைப்பதற்கு ஏற்றது. ஏக்கருக்கு 12 முதல் 14 டன் வரை மகசூல் தரும். இந்த மகசூல் உள்ளுர் வகையை விட 19 சதவீதம் அதிகம். பாசன வசதி, வடிகால் வசதியுடைய அனைத்து தோட்டக்கால் நிலங்களிலும் சாகுபடி செய்ய உகந்தது. வீடு மற்றும் மாடித்தோட்டத்திலும் வளர்க்கலாம்.
நாற்று நடவு (Planting)
கோ.1 மணத்தக்காளி ரகத்தை நாற்று பாவி நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 100 கிராம் விதை தேவை. 30க்கு 30 செ.மீ இடைவெளியில் 30 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நாற்று நடுவதற்கு முன் நிலத்தை தயார் செய்வதற்கு 10 முதல் 15 டன் தொழு உரம் இடவேண்டும். இதனுடன் தலா 50 கிலோ என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்து இடவேண்டும். கீரை அறுவடைக்கு பின் 50 கிலோ தழைச்சத்தை இட வேண்டும்.
சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் வண்டுகளின் தாக்குதலை கட்டுப்படுத்த 5 சதவீத வேப்பங்கொட்டை சாறு அல்லது 3 சதவீத வேப்பெண்ணெய் கரைசலை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.
இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் கலந்து நாற்று நட்ட 30 மற்றும் 45ம் நாட்களில் இலை வழியாக தெளிக்க வேண்டும். இதன் வயது 160 முதல் 180 நாட்கள்.
45 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை அறுவடை செய்யலாம். நன்கு வளர்ந்த செடிகளை நிலத்திலிருந்து 15 செ.மீ விட்டு அறுவடை செய்ய வேண்டும்.
- ஆரோக்கியமேரி, உதவி பேராசிரியர்
ராமசுப்பிரமணியன்,
திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை
94980 21304
மேலும் படிக்க
இயற்கையான முறையில் அம்மோனியா உரத்தை தரும் பாக்டீரியா!
தரமற்ற விதைகளால் காராமணி விளைச்சல் பாதிப்பு: கவலையில் விவசாயிகள்!
Share your comments